தயாரிப்பாளருடன் சண்டை போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. சிக்கலில் மதராஸி!.. அடப்பாவமே!...

by Murugan |   ( Updated:2025-03-04 06:09:34  )
madharasi
X

Madharasi: தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக இருப்பவர் இவர். இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆசைப்பட்ட காலம் உண்டு.

துப்பாக்கி திரைப்படம்: விஜயை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் விஜய்க்கே முக்கிய படமாக அமைந்தது. விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக துப்பாக்கி எப்போதும் இருக்கும். அதன்பின் மீண்டும் விஜயை வைத்து கத்தி படத்தையும் இயக்கினார். அடுத்து மீண்டும் விஜயின் படத்தை அவர் இயக்குவதாக இருந்தது.

ஆனால், ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் சரியாக போகவில்லை என்பதால் முருகதாஸின் சம்பளத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறைக்க அந்த படத்திலிருந்து முருகதாஸ் வெளியாகிவிட்டார். அதன்பின்னர்தான் நெல்சன் இயக்க பீஸ்ட் படம் உருவானது.


மதராஸி திரைப்படம்: எனவே, கடந்த 4 வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. அப்போதுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் பிஜு மேனன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், ருக்மணி வசந்த், சபீர் உள்ளிட்ட பலரும் நடிக்க படப்பிடிப்பு துவங்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்த்தின் தலைப்பு மதராஸி என்கிற அறிவிப்பும் வெளியானது.

சால்மான்கானுடன் சிக்கந்தர்: படம் 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கப்போய்விட்டார் முருகதாஸ். இதனால், சிவகார்த்திகேயனும் அமரன் படத்தில் நடித்துவிட்டு, இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்துவிடும். அதன்பின் மதராஸி படத்தின் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வெளியானது. ஆனால், அது நடப்பது போல தெரியவில்லை. சிக்கந்தர் படம் இந்த மாதம் முடிய வாய்ப்பில்லை என்கிறார்கள். இதனால் கடுப்பான மதராஸி தயாரிப்பாளர் ‘எப்போது நம் படத்தை முடித்து கொடுப்பீர்கள்?’ என சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் கோபமடைந்த முருகதாஸ் ‘இதுவரை நீங்கள் செய்த செலவு என்னவென சொல்லுங்கள். அதை கொடுத்துவிடுகிறோம். வேறு தயாரிப்பாளரை வைத்து மீது படத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என சொல்ல அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

Next Story