வேகமா பாட்டு போட அதென்ன பந்தயமா?.. இளையராஜாவை அட்டாக் பண்ணும் ஏ.ஆர்.ரஹ்மான்!..

by MURUGAN |   ( Updated:2025-05-21 06:21:15  )
வேகமா பாட்டு போட அதென்ன பந்தயமா?.. இளையராஜாவை அட்டாக் பண்ணும் ஏ.ஆர்.ரஹ்மான்!..
X

AR Rahman: இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மிகவும் வேகமாக மெட்டுக்களை உருவாக்கி ரிக்கார்டிங் செய்து பாடலை இயக்குனரிடம் கொடுத்துவிடுவார். 40 வருடங்களுக்கு முன் அவர் போட்ட பாடல்களை இப்போதும் தமிழ் படங்களில் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக இளையராஜா ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போதும் ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படும் இளையராஜாவின் பாடல்கள் சில நிமிடங்களில் உருவானவைதான். குணா படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களை உருவாக்க இளையராஜா எடுத்துக்கொண்டது இரண்டு மணி நேரம்தான். மெட்டுக்கள் தயாராகிவிட்டால் அன்று மாலைக்குள்ளேயே பாடகர்களை வரவழைத்து பாடலை ரிக்கார்டிங் செய்து கொடுத்துவிடுவார் இளையராஜா. ஒருபக்கம் வாரத்தில் பாதி நேரம் படத்திற்கு பின்னணி இசை அமைப்பதிலும் ஈடுபடுவார்.

அதனால்தான் இசையமைக்க துவங்கி 4 வருடங்களில் 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார் இளையராஜா. அடுத்த 10 வருடங்களில் 500 படங்களுக்கு இசையமைத்திருந்தார். உலகில் எந்த இசையமைப்பாளரும் இவ்வளவு வேகமாக படங்களுக்கு இசையமைத்தது இல்லை. சின்னதம்பி படத்தில் இடம் பெற்ற 13 பாடல்களுக்கான மெட்டுக்களை ஒரு மணி நேரத்திற்குள்ளேயே உருவாக்கிவிட்டார் என பி.வாசு கூறியிருந்தார்.


இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கே 3 மாதம் எடுத்துக்கொள்கிறார்கள். அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு இசையமைக்க 6 மாதங்கள் கூட எடுத்துக்கொள்வதும் உண்டு. அதன்பின் பின்னணி இசை பல நாட்கள் நடக்கும். இதுபோக யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் துபாயில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் போட்டு கொடுங்கள். அங்கே கம்போசிங் செய்வோம் எனவும் சொல்கிறார்கள்.

ஆனால், இளையராஜா தனது வீட்டிலும், பிரசாத் ஸ்டுடியோவிலும்தான் அவ்வளவு பாடல்களையும் உருவாக்கினர். அவரைப்போல ஒரு இசையமைப்பாளரை இனி உலகம் பார்க்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், இளையராஜாவுக்கு போட்டியாக வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவை மறைமுகமாக சீண்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘இவ்வளவு மணி நேரத்தில் பாட்டு போட்டுவிடுவேன் என சொல்வதற்கு அது என்ன பந்தயமா?.. என்னிடம் எவ்வளவு நாட்கள் ஆகும் என கேட்டால் 6 மாசம் ஆகும், இல்லனா 3 மாசம் ஆகும் என சொல்லிவிடுவேன்’ என சொல்லியிருக்கிறார். மேலும், நீ தபேலா, நீ கீபோர்டு என சொல்லி கம்போஸ் பண்ணா அது ஒரு பேட்டர்னா இருக்கும். நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார். இது எல்லாமே அவர் இளையராஜாவை மனதில் வைத்தே பேசியிருப்பதாக கருதப்படுகிறது.

Next Story