தக் லைப் படத்தில் மணிரத்னம் செய்த தரமான சம்பவம்!. ஆடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்!...

Thug Life: தமிழ் சினிமாவில் முக்கியமான அதேநேரம் சிறந்த இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். நாயகன், ரோஜா, பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர். இவரை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாயகன் படம் பார்த்து இயக்குனராக ஆசைப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை கணக்கெடுத்தால் நாயகனுக்கு அதில் இடம் உண்டு. இப்போது 38 வருடங்கள் கழித்து கமலுடன் இணைந்து தக் லைப் படத்தை கொடுத்திருக்கிறார். பல வருடங்களுக்கு பின் கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கேங்ஸ்டர் பின்னணியை மையமாக வைத்தே இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். கமல்ஹாசன் சொன்ன கதையை தனது ஸ்டைலில் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார் மணிரத்னம். போலீசாரின் என்கவுண்டரிலிருந்து சிறுவனாகிய அமர்(சிம்பு) தன்னை காப்பாற்ற அவனை தனது சொந்த மகனை போல் வளர்க்கிறார் ரங்கராய சக்திவேல்(கமல்).

ஆனால், ஒரு கட்டத்தில் கமலின் இடத்தை பிடிக்க சிம்பு ஆசைப்படும்போது நடக்கும் சம்பவங்கள்தான் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் வில்லனாக சிம்பு நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ரஹ்மான் ‘இந்த படத்தின் முதல் காட்சிக்கு நான் ஒரு பின்னணி இசையை அமைத்திருந்தேன். அதை மணி சார் பார்த்தபோது நான் ஊரில் இல்லை. அவருக்கு அது பிடிக்கவில்லை. எனவே, அவரே ஒரு இசையை போட்டுவிட்டார். ஊரிலிருந்து வந்து அதை கேட்டபோது ஆடிப்போய்விட்டேன். அதனால்தான் அவர் மாஸ்டராக இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது’ என சொல்லியிருக்கிறார்.
தக் லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள விண்வெளி நாயகா பாடலை கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கிறார்.