ஆடுனது தப்பா? ரோபோ சங்கர் மனைவியின் கட்டுக்கடங்காத துக்கத்தை சொன்ன அறந்தாங்கி நிஷா
காமெடி மன்னன் ரோபோ :
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். இவர் அடிப்படையில் bodybuilder கலைமீது உள்ள தாகத்தால் மதுரையில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் தன்னுடைய உடல் முழுவதும் silver paint அடித்து ரோபோ போல நடனம் ஆடினதால் இவருக்கு மக்கள் மத்தியில் ரோபோ சங்கர் என்ற அடையாளம் கிடைத்தது.
அதன் பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. முறையாக பயன்படுத்திக் கொண்ட ரோபோ சங்கருக்கு அடுத்ததாக சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மற்றும் சுட்டி அரவிந்துடன் இணைந்து அசத்தல் காமெடிகளை செய்து வந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையிலும் கால் பதிக்க வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக இவர் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவருக்கு காமெடியில் மிகப்பெரிய opening கொடுத்தது. அதில் வரும் ’அன்னைக்கு காலையில 6:00 மணி’ டயலாக் இன்றும் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த காமெடி நெட்டிசன்களின் favourite meme template ஆகவும் இருக்கிறது. அப்படி திரைப்படங்கள்,reality show என்று மக்களை entertain செய்து வந்த ரோபோ சங்கர் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
தன்னை மறந்து குடித்த ரோபோ :
அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்துதால் அவரின் இறப்புக்கு இது ஒரு காரணமாக அமைந்தது. ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமாகி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வந்தார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் மீண்டும் விட முடியாத குடியால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரோபோ சங்கர் காலமானார். இவரின் உடலுக்கு திரையுலகில் உள்ள முன்னணி பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
கட்டுக்கடங்காத துக்கத்தில் ரோபோவின் மனைவி :
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது மனைவி பிரியங்கா ஆடினார். இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் விவாத பொருளாக மாறிவிட்டது. ஒரு பெண் எப்படி இறந்த உடலுக்கு முன் இப்படி ஆடலாம்? இது கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும் இப்படி ஆடி இருக்க கூடாது என்று பல விமர்சனங்கள் வருகிறது. இதற்கு பதில் சொல்லும் விதமாக விஜய் டிவி காமெடி பிரபலம் அறந்தாங்கி நிஷா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்,” ஒருத்தர் தவறிட்டார் அவர பத்தி நல்ல கருத்துக்களை மட்டும் பகிர்வது தான் மனிதனுக்கு அழகு. தன்னோட கணவன் இறப்பில் அந்த பெண் ஆடினது தவறா? இல்ல ஒரு பெண் ஆடினதே தவறா? காதலை எப்படி வேணா வெளிப்படுத்தலாம். ஆனால் வருத்தத்தை அவ இப்படி வெளிப்படுத்தினது தப்பில்லை. அவங்க காதலிச்ச மேடையே ஒரு நடனமேடைதான். இறுதி பயணத்தில் காதலோடு சேர்த்து தன் நடனத்தையும் அவருக்காக கொடுத்தது நல்ல காதலுக்கு அழகு”. என்று ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
