Arasan: டெரர் லுக்கில் சிம்பு!.. அரசன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தரம்!.. செம வைப்!...

STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் அறிவிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. விடுதலை 2 படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் முழு கதை ரெடியாகாததால் சூர்யா அதிலிருந்து விலகிவிட்டார்.
உடனே ஒரு படத்தை தூங்க வேண்டும் என்பதால் ஏற்கனவே தான் இயக்கிய வடசென்னை படத்திலிருந்து ஒரு கிளைக் கதையை உருவாக்கி அதில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டார் வெற்றிமாறன். ஏற்கனவே வாடிவாசல் படம் தள்ளிக் கொண்டு போனதால் அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே இந்த படத்திற்கும் தயாரிப்பாளராக மாறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆர்வமுடன் இருந்தார் சிம்பு. அவரை வைத்து ஒரு புரோமோ வீடியோவை எடுக்க திட்டமிட்ட வெற்றிமாறன் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் சில காரணங்களால் அந்த வீடியோ வெளியாகவில்லை.
சிம்பு, வெற்றிமாறன் ஆகியோரின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தாணு அப்செட் ஆனதால் படத்தின் வேலைகள் முடங்கிப் போனது. அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டு தற்போது பட வேலைகள் மீண்டும் துவங்கியிருக்கிறது. சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பு அரசன் எனவும் அறிவித்தார்கள். இந்த படத்தின் புரமோ வீடியோ இன்று மாலை 6.02 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. நாளை காலை 10.07 மணிக்கு யுடியூப்பில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது சிம்புவின் முகம் தெளிவாக தெரியும் படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிம்புவின் முகம் முழுவதும் ரத்தம் வழிவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த போஸ்டரை பார்த்த அவர்கள் ‘போஸ்டர் தரமாக இருக்கிறது.. செம வைப். என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.