வணங்கான் ஹிட்டுன்னு காட்டி அருண் விஜய் செய்யும் வேலை!.. இட்ஸ் வெரி ராங் புரோ!...

by Murugan |
arun vijay
X

Vananggaan: தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த விஜயகுமாரின் மகன் அருண் விஜய். சின்ன வயதிலேயே அப்பாவை போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. 1995ம் வருடம் வெளிவந்த முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.

அருண் விஜய்: எனவே, அருண் விஜய் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறமுடியாமல் தவித்து வருகிறார். ஆரம்பத்தில் அருண் குமார் என்கிற பெயரில்தான் பல வருடங்கள் சினிமாவில் நடித்து வந்தார். 10 வருடங்களுக்கு முன்பு அதைமாற்றி அப்பா பெயரை பின்னால் போட்டு அருண் விஜயாக மாறினார்.


மகிழ் திருமேனி: பல இயக்குனர்களின் படங்களில் நடித்தும் அருண் விஜய் முன்னணி ஹீரோவாக மாறமுடியவில்லை. ஏனெனில் அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஒரு நல்ல வாய்ப்பு வரும் என காத்திருந்தவருக்கு மகிழ் திருமேனி கிடைத்தார். அப்படித்தான் தடையற தாக்க படம் வெளிவந்தது. இந்த படம் அருண் விஜய ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

என்னை அறிந்தால்: அதைவிட கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் அவரை அஜித் ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்தது. அதேபோல், மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படமும் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.


இப்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்திலிருந்து சூர்யா வெளியேற அந்த வாய்ப்பு அருண் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. இந்த படம் ஒரு வெற்றிப்படம் போல காட்டப்பட்டு வருகிறது. ஆனால், சிலரோ வணங்கான் ஹிட் படம் இல்லை என்றும் சொல்கிறார்கள். வணங்கான் படத்தை ஹிட் படம் போல காட்டி தனது சம்பளத்தை ஏற்றிவிட்டார் அருண் விஜய்.

சில கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்கி நடித்த அவர் இப்போது 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். எனவே, இவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள் வந்த வழியே ஓடி விடுகிறார்களாம். ஒருபக்கம், வணங்கான் படத்திற்கு அவருக்கு பேசிய சம்பளமே கொடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சினிமாவில் நீடிக்க வெற்றி பெறவேண்டும் அல்லது வெற்றி பெற்றது போல காட்டிக்கொள்ள வேண்டும். அருண் விஜய் இதில் எந்த ரகம் என்பது போகப்போக தெரிய வரும்.

Next Story