அப்படி என்ன செஞ்சார் வெற்றிமாறன்!... இப்படி பேசுறாரே அஸ்வத் மாரிமுத்து!..

Ashwath Marimuthu: சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு என்பது சுலபமில்லை. தயாரிப்பாளரின் மகனாக இருந்தால் சுலபமாக இயக்குனர் ஆகலாம். அல்லது பெரிய இயக்குனர்களிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து அதன்பின் இயக்குனர் ஆகலாம். அதுவும், அவருக்கு தயாரிப்பாளரும், அந்த கதையில் நடிக்க ஒரு நடிகரும் சம்மதிக்க வேண்டும்.
ராஜ்குமார் பெரியசாமி: இல்லையெனில் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். ராஜ்குமார் பெரியசாமி கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கி 2017ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் ரங்கூன். அதன்பின் 7 வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் அமரன். சினிமா சிலரை இப்படித்தான் வைத்திருக்கும். ஆனால், ஒரு படத்தில் தன்னை நிரூபித்து டேக் ஆப் ஆகிவிட வேண்டும். இல்லையென்றால் சினிமா கீழே தள்ளிவிட்டு சென்றுவிடும்.
சினிமா மீது ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் குறும்படங்களை இயக்கி தங்களின் திறமையை வளர்த்துக்கொள்வார்கள். பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கும் அந்த குறும்படம் உதவும். சிலர் குறும்படங்கள இயக்கி பயிற்சி எடுத்தபின் நேராக சினிமாவை இயக்குவார்கள்.

நாளைய இயக்குனர்: அப்படி வந்த ஒருவர்தான் அஸ்வத் மாரிமுத்து. கல்லூரி படிப்புக்கு பின் குறும்படங்களை இயக்கி வந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் இவரும் ஒருவர். அதன்பின் பல வருடங்கள் கழித்து ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கினார்.
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து அமைத்த திரைக்கதையை பலரும் பாராட்டியிருந்தார்கள். இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படம் 100 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.
வெற்றிமாறனே காரணம்: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அஸ்வத் ‘நான் இங்கே நிற்பதற்கு வெற்றிமாறன் சார்தான் காரணம். முதல் முத்தம் அப்படின்னு ஒரு ஷார்ட்பிலிம் எடுத்தேன். அதற்கு விருது கிடைக்கவில்ல. ஆனால், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெற்றிமாறன் சார் ‘இந்த பையன் நல்ல எழுத்தாளனா வருவான்’ என சொன்னார். அதுக்கு அப்புறம்தான் ‘ஓ மை கடவுளே, டிராகன்’ படமெல்லாம்’ என பேசியிருக்கிறார். அடுத்து சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.