AA26: ஹாலிவுட் படமாக மாறப்போகும் அட்லி - அல்லு அர்ஜுன் படம்.. இனிமே அவர் ரேஞ்சே வேற..
AA26: தமிழ் சினிமாவில் மிகவும் அதிக பட்ஜெட் படங்களை எடுப்பதை துவங்கி வைத்த ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர்தான் அட்லி. தனது குருவை போலவே இவரும் அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை கதற விடுவார். இவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மட்டுமே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களையும் அதிக பட்ஜெட்டில் எடுத்தார்.
விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கியதால் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் அழைத்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார். அப்படி உருவான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக அட்லி மாறினார்.
ஜவான் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புஷ்பா புகழ் நடிகர் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்தை துவங்கினார் அட்லீ. இந்த படத்தில் நிறைய ஹாலிவுட் கலைஞர்களும் பணிபுரிந்து வருகிறார்கள் அதோடு இப்படத்திற்கான கதையையே ஹாலிவுட் கதாசிரியர் ஒருவரோடு இணைந்து உருவாக்கி இருக்கிறார் அட்லீ.
அல்லு அர்ஜுனும், அட்லியும் அமெரிக்கா சென்று அங்கே ஹாலிவுட் ஸ்டுடியோவில் இந்த படம் பற்றி அங்குள்ள கலைஞர்களிடம் பேசும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில்தான் இந்த படம் ஒரு ஹாலிவுட் படமாக உருவாக்கப் போவது தெரிய வந்திருக்கிறது. அதாவது வார்னர் பிரதர்ஸ் போன்ற ஒரு முன்னணி ஹாலிவுட் நிறுவனமும் இப்படத்தில் இணையவிருக்கிறது. இந்தியாவிற்குள் இப்படத்தை சன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய, உலக அளவில் இப்படத்தை அந்த ஹாலிவுட் பட நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதன் மூலம் அட்லியின் ரேஞ்ச் வேற லெவலுக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மட்டுமல்ல.. புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் அதிக வசூலை கொடுத்த நடிகர் என மாறியுள்ள அல்லு அர்ஜுன் அட்லி படம் மூலம் உலக அளவில் மேலும் பேமஸ் ஆவர் மாறுவார் என கணிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு முக்கிய இடத்தில் நடிக்கவிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மேலும் சில நடிகைகளும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
