ஹரிஷை தொடர்ந்து வம்பிழுத்த அதுல்யா... டீசல் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் டீசல். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் அப்பட நாயகி அதுல்யா ரவி பேசும்போது,
டீசல் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் உட்பட எல்லோருமே இந்த படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகி இருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றினோம்.
மேலும் என் திரையுலகப் ப்யணத்தில் என்றும் நினைத்து பார்க்கும்படியான மிகப்பெரிய ஹிட் பாடல் கொடுத்த இசையமைப்பாளர் திபு அவருக்கும் நன்றி. ஹரிஷை எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வம்பிழுப்பேன். உங்கள் தீபாவளியை டீசல் படத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள் என்று கூறினார்.