இன்னும் ஒரு பொண்ணை தேடிக்கிட்டு இருக்கேன்.. பப்லு பிரித்வீராஜின் ஆசை

by ROHINI |
babloo
X

babloo

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகர் பப்லு பிரித்வீராஜ். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த சினிமாவில் இருக்கிறார். அதுவும் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி நடித்த ஒரு படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர்தான் பப்லு ப்ரித்வீராஜ். எம்ஜிஆரை போல எந்தப்பழக்கமும் இல்லாதவர்.

அதன் காரணமாகவே எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அவர் கட்சியில் இணைந்தார். சினிமா மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் பப்லு. ராதிகாவுடன் செல்வி சீரியலிலும் நடித்திருக்கிறார். அதில் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் பப்லு. அப்போது ராதிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டும் போது ‘வேண்டாம் இது ஏழரை நாட்டு சனி.இதை பற்றி ஒன்றும் சொல்லவிரும்பவில்லை’ என தவிர்த்துவிட்டார் பப்லு.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய கெரியர் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணமே என்னுடைய மகன் தான். ஆட்டிசம் குறைபாட்டால் அவன் பாதிப்படைந்திருக்கிறான். அவன் பிறந்து தெலுங்கு படத்தில் நடித்தேன். பின் அவள் வருவாளா படத்தில் நடித்தேன். அதன் பிறகுதான் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது. அப்படியே உடைந்துவிட்டேன். ஆனால் இப்போது அதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன். எல்லாமே என் மகனுக்காகத்தான் என பப்லு கூறினார்.

காதலை பற்றி கூறும் போது காதலுக்கு எப்போதும் வயசாகாது. இன்னும் நான் காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சரியான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் பப்லு கூறினார். ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின் மலேசியா பெண்மணியுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் பப்லு. பின் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

babloo

அதன் பிறகு அனிமல் பட வாய்ப்பு வர தொடர்ந்து இப்போது 29 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பப்லு. இருந்தாலும் இன்னொரு வாழ்க்கைத்துணையை தேடிக் கொண்டிருப்பதாக பப்லு கூறியிருக்கிறார்.

Next Story