பகவந்த் கேசரி ரீமேக் இல்லை தளபதி69… ஆனா உரிமை வாங்கியதன் காரணமே வேற!..

by Akhilan |
பகவந்த் கேசரி ரீமேக் இல்லை தளபதி69…  ஆனா உரிமை வாங்கியதன் காரணமே வேற!..
X

Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 69 திரைப்படம் ரீமேக் கிடையாது என்றும் உரிமம் வாங்கியதற்கான காரணமும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கசிந்திருக்கிறது.

தளபதி69 பகவந்த் கேசரி ரீமேக்கா?

தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் தன்னுடைய நடிப்புலகத்திலிருந்து வெளியேற இருக்கிறார். இதனால் அவருடைய கடைசி திரைப்படமாகத்தான் தளபதி 69 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

15 க்கும் அதிகமான இயக்குனர்களிடம் கதை கேட்கப்பட்டு கடைசியாக தன்னுடைய இயக்குனரை ஹெச் வினோத் என நடிகர் விஜய் முடிவெடுத்து இருக்கிறார். இப்படத்தை பிரபல நிறுவனமான கேவிஎன் புரொடக்சன் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். கடைசி திரைப்படம் என்பதால் இது அரசியல் கதையாக தான் இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நேரத்தில் தளபதி 69 திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆக இருக்கும் என தகவல்கள் கசிந்தது.

அதற்கேற்ப தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அப்படத்தின் உரிமையை வாங்கியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்நிலையில் தற்போது இது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகிவிட்டது. இரண்டு படங்களின் கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த வித ஒற்றுமையும் இல்லையாம்.

ஆனால் படத்தின் சில காட்சிகள் ஒன்று போல் இருப்பதால் ரிலீசுக்கு பின்னால் ஏற்படும் சட்டச்சிக்கலில் இருந்து தப்பிக்கவும், ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவும் ஹெச்.வினோத் உரிமையை வாங்க கோரிக்கை வைத்தாராம். அதைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பகவந்த் கேசரி திரைப்படம் அனில் ரவிபுடி எழுதி இயக்கியது. இதில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். நண்பனின் மகளை அவருடைய இறப்பிற்கு பின்னர் பாதுகாக்கும் பகவந்தாக பாலகிருஷ்ணா நடித்திருப்பார். ஸ்ரீ லீலாவை ராணுவத்தில் உயர் அதிகாரியாக மாற்ற அவர் போராடும் கதைக்களமாக திரைப்படமாக அமைந்திருக்கிறது.

இதே போன்று சமீபத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படக்குழுவுக்கு பிரபல பிரேக்டவுன் படக்குழுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்து இருக்கிறதாம். எனக் கூறப்படுவதால் அதற்கான உரிமம் வாங்கப்படாமல் படம் எடுத்ததற்காக பெரிய தொகையை இழப்பீடாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

Next Story