அந்தப் படத்தின் ஹீரோயின் பாக்யராஜ் மகளா? இதுவரை தெரியாம போச்சே

தமிழ் சினிமாவில் கதை சொல்வது என்பது ஒரு தனி கலைதான். ஏன் நம் நிஜ வாழ்க்கையில் கூட நம் தாத்தா பாட்டி கதை சொல்லும் முறையே தனி. கதை சொல்ல ஆரம்பித்தால் தன்னையே மறந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகிறோம். உறக்கம் என்று சொல்வதை விட சொர்க்கம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு கதை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

அப்படி சினிமாவில் கதை சொல்வதில் மிகவும் கை தேர்ந்தவர் இயக்குனர் பாக்யராஜ். திரைக்கதை மன்னன், வித்தகன் என்று பாக்யராஜை சொல்லலாம். கதை சொல்கிற முறையில்தான் சுவாரஸ்யமும் வெற்றியும் இருக்கிறது. இந்திய சினிமாவிலேயே கதை திரைக்கதை அமைப்பதில் வித்தகன் பாக்யராஜ்தான். திரைக்கதையின் ஜாலத்தை நன்கு அறிந்தவர்.

பாக்யராஜை ஒரு பட்டறை என்று கூட சொல்லலாம். இந்த பட்டறையில் இருந்து நிறைய பேர் வெளியே வந்து இன்று பல பெரிய ஆளுமைகளாக இருக்கிறார்கள். ஏராளமான இயக்குனர்களை பாக்யராஜ் உருவாக்கியிருக்கிறார். கோவை மண்ணை சார்ந்த பாக்யராஜ் சினிமாவில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார். அவர் நினைத்ததை போல் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து இன்று வரவேற்கிறார்கள்.




பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்தான் பாக்யராஜ். ஒரு குருவிற்கு செலுத்தும் நன்றி என்னவெனில் தான் சொல்லிக் கொடுத்ததை நல்ல முறையில் அந்த ஆசான் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அந்த வகையில் பாக்யராஜ் அதை சிறப்பாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்,

அந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். மகன் சாந்தனு ஒரு நடிகர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளை பற்றி இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால் அவரும் ஒரு நடிகைதான். பாரிஜாதம் என்ற படத்தில் நடிகர் பிரித்விராஜுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்த சரண்யாதான் பாக்யராஜின் மகள்.




அந்த ஒரு படத்தில் தான் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு உதவி இயக்குனராக, ஸ்கிரிப் ரைட்டராக என சினிமாவில் பல துறைகளில் பணியாற்றி வருகிறாராம் சரண்யா.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it