‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பே பாலாவின் அந்த படத்தில் கமிட் ஆன அஜித்! இது ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

ஏற்கனவே அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே சில பல கருத்து வேறுபாடு ஏற்பட நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகினார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நான் கடவுள் படத்திற்கு முன்பே பாலாவுடன் இணைந்து அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

இதைப் பற்றி சமீபத்திய ஒரு விழா மேடையில் இயக்குனரும் நடிகருமான அமீர் அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது வேற எந்த படமும் இல்லை. விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் தான். பாலா இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே அஜித் தான் நடிக்க வேண்டியது தாம் .

இதை பற்றி அமீர் கூறியது. 1993 ஆம் ஆண்டு இந்த படத்தின் கதையை அகிலன் என்ற பெயரில் உருவாகினாராம் பாலா. படத்திற்கான பூஜை காலையில் போடப்பட்டு மாலையிலேயே படம் ட்ராப் ஆகிவிட்டதாம். அதன் பிறகு இந்த கதையை எப்படியாவது படமாக்க வேண்டும் என்ற முயற்சியோடு போராடி இருக்கிறார் பாலா.

அப்போது மூத்த நடிகர்களாக இருந்த ரஜினி கமல் இவர்களை தவிர அனைத்து நடிகர்களும் இந்த படத்தின் கதைக்குள் வந்து வந்து போயிருக்கிறார்களாம் .அதில் இப்போது இருக்கும் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்தும் இந்த கதைக்குள் வந்தவர் தான். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டது.

அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு கந்தசாமி என்ற தயாரிப்பாளர் இந்த படத்தை நான் எடுக்கிறேன் என முன்வர அகிலன் என்ற பெயரை சேது என மாற்றி 12 வருடமாக வெற்றிக்கு போராடிக் கொண்டு இருந்த விக்ரமை இந்த படத்தின் கதாநாயகன் ஆக்கினார் பாலா. படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் நேரத்தில் பணமில்லாமல் படம் விற்பனை ஆகாமல் இருந்திருக்கிறது.

ஒரு சமயம் ஹேராம் ஷூட்டிங்கிற்க்கு வந்த கமல் இந்தப் படத்தின் கதையை அறிந்து 'படத்தை பற்றி நான் கேள்விப்பட்டேன். படம் நன்றாக இருக்கிறதாமே. ரிலீஸ் ஆக என்னுடைய வாழ்த்துக்கள்' என சொல்லிவிட்டு சென்றாராம். இதைப்பற்றி கூறிய அமீர் சேது திரைப்படத்தின் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் அந்த படத்தின் கதை உலகநாயகனிடம் போய் நல்ல முறையில் சென்று அடைந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது அப்போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்பவே படம் பாதி வெற்றி அடைந்து விட்டதாக நாங்கள் உணர்ந்தோம் என அந்த விழா மேடையில் சேது படத்தின் உருவாக்க கதையை பற்றி கூறினார்.

Related Articles

Next Story