1. Home
  2. Cinema News

போதை பிரியை லட்சுமிமேனன்.. வாய்ப்பு போனதற்கு காரணமே இதுதான்.. பகிர் தகவலை வெளியிட்ட பிரபலம்

போதை பிரியை லட்சுமிமேனன்.. வாய்ப்பு போனதற்கு காரணமே இதுதான்.. பகிர் தகவலை வெளியிட்ட பிரபலம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தமிழில் முதலில் அறிமுகமான ”கும்கி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றார். அதன் பிறகு இவர் நடித்த சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற படங்கள் இவருக்கு தனி அடையாளத்தை பெற்று கொடுத்தது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்த லட்சுமி மேனன் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று சினிமா வேண்டாம் என்று
தன்னுடைய மேற்படிப்பதற்காக சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும், ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலை தொடர்ந்து ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் தரப்பு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மேனுடன் மதுபான விடுதிக்கு வந்திருந்த மூன்று பேரையும் கைது செய்தது போலீஸ், விசாரணைக்கு அழைத்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாக எர்ணாகுளம் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

விசாரணை போது, மதுபான விடுதியில் மது அருந்தும் போதும் ஐடி ஊழியருக்கும் லஷ்மி மேனன் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில் கடுப்பான லக்ஷ்மி மேனன் கேங் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்தி பழிவாங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் நடுரோட்டில் குடிமி பிடி போடும் சண்டை காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் லட்சுமி மேனன் கூடிய சீக்கிரமே எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி சம்பவத்திற்கான விளக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சினிமா நடிகர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில்," தமிழில் வாய்ப்பு வராததற்கு காரணம் என்ன பத்தி தப்பு தப்பா பத்திரிகைகள்ல எழுதிட்டாங்கன்னு லட்சுமி மேனன் கூறியிருந்தார். அன்னைக்கு அப்படி கூறியிருந்தது நான்தான். ஒரு காமெடி நடிகர் பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரமாக குடித்துவிட்டு தன்னை மறந்து கீழே விழுந்து அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்த நிலையில் அவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

இது உண்மை சம்பவம். இதைத்தான் அன்று பத்திரிகைகளில் சொன்னேன். ஆனால் அது இன்று நிரூபணம் ஆகிவிட்டது. ஏன் அப்படி போட்டீர்கள்? என்று பலர் கேட்டனர். இன்னிக்கு அது உண்மை ஆகிடுச்சு. நடிகைளைதான் நாம் கடத்தி கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை யாரையாவது கடத்தி கேள்விப்பட்டிருக்கிறோமா? அது இங்க தான் நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அவருக்கு இன்னும் கால் கட்டு போடாதது தான்.

அவரின் பெற்றோர் எத்தனையோ முறை அவரை திருமணம் செய்து கொள் என்று சொல்லி இருக்கிறார்கள் ஆனால் லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். லட்சுமிமேனனின் நண்பர்கள் தான் அவரைக் கெடுத்து விட்டார்கள் என்று அவர்களின் பெற்றோர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. ஒரு நடிகையின் பழக்க வழக்கங்கள் நடைமுறை பொறுத்துதான் அவருக்கு வாய்ப்பு வரும்.

இந்த மாதிரி கடத்தல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் இனிமேல் அவருக்கு தமிழில் இருந்து வாய்ப்பு வருமா? என்பது பெரிய கேள்வி குறிதான். மார்க்கெட் போய் மார்க்கெட் வந்த ஹீரோயின் லட்சுமிமேனன். அவருக்கு ஒழுங்காக திருமணம் நடந்திருந்தால் இப்பொழுது இந்த மாதிரியான பிரச்சனைகளில் அவர் சிக்கி இருக்க மாட்டார். குடும்பம், கணவன், குழந்தை என்று அதில் கவனம் செலுத்தி இருப்பார். லட்சுமி மேனனின் தோழிகள், தோழர்கள் சரியில்லை அவரின் கெரியர் கெட்டுப் போனதுக்கு காரணம் அவர்கள்தான். என்று பயில்வான் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.