ஆர்த்திக்கு ஜெயம் ரவி கொடுக்கப் போகும் ஜீவனாம்சம்..?பயில்வான் சொன்ன ஆச்சரிய தகவல்!

by SANKARAN |   ( Updated:2025-05-11 10:52:10  )
aarthi,kenisha,  jayam ravi.
X

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு கோர்ட்ல ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் கெனிஷாவோட ஜாலியா சுத்துறாரு ரவி மோகன். ஆர்த்தியும் பரபரப்பா அறிக்கை விடுறாங்க. நடப்பது என்னன்னு பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் சொல்றாரு. வாங்க பார்க்கலாம்.

கெனிஷா பிரான்சிஸோடு ஏற்கனவே ரவி மோகன் லிவிங் டுகதர்ல தான் இருக்காரு. கெனிஷா பாடகி. ரெண்டு பேரும் தியானம் பண்ணுவாங்க. எப்படிப்பட்ட தியானம்னு தெரியாது. ஆனா அவசரப்பட்டுட்டாரோன்னு தெரியுது. பட்டு வேட்டை, பட்டு சட்டை, பட்டு சேலை, பட்டு ஜாக்கெட்னு ரெண்டு பேரும் ஐசரி கணேஷ் இல்லத்திருமண விழாவுக்குக் களையாக வந்தார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்பதற்கான அறிகுறி.

ஆர்த்தி, ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடந்துக்கிட்டு இருக்கு. இருவரும் சமாதானமாக முயற்சி பண்ணுங்கன்னு குடும்பநல கோர்ட்ல சொல்லிருக்காங்க. ஆனா இருவரும் விவாகரத்துல உறுதியா இருக்காங்கன்னு நல்லா தெரியுது.

ஆர்த்தி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2 பசங்களுக்கும் ஜெயம் ரவி என்ன செய்யப் போறாருன்னு கேட்டுருக்காரு. ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமாரும் மறைமுகமாக சொல்லி இருக்கிறாராம். இன்னொரு புருஷன் உனக்கு தயாராக இருக்கிறான். திருமணம் எப்ப வேணாலும் நடக்கலாம்னு சொல்லி இருக்கிறாராம்.


ஏற்கனவே ஆர்த்தி என் வீட்டை விட்டு வெளியேற என்னையே என் கணவர் துரத்துகிறார். அதனால என் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போறீங்கன்னு ஆர்த்தி கேட்குறாங்களாம். பசங்க அம்மா கூட தான் இருக்கணும்னு சொல்லிட்டாங்கன்னா குடும்ப நல கோர்ட்ல பசங்களுக்கு என்ன ஜீவனாம்சம் என்பது முடிவாகும். அதைக் கோர்ட் தான் தீர்மானிக்கும். ரவி 2வதாக கெனிஷாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

அதனால அந்தப் பசங்க அம்மா கூட தான் இருக்கணும்னு சொல்லும். அதனால அம்மாவுக்கு வீடோ, சொத்தோ, குறிப்பிட்ட ஜீவனாம்சமோ கொடுக்க ரவி தயாரா இருப்பாரு. என்ன இருந்தாலும் அவங்க மகன்கள்தான். அதைக் கோர்ட் தான் முடிவு பண்ணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story