கமலுக்கு வாய்ப்பூட்டு போட்ட கர்நாடகா நீதிமன்றம்!.. அடுத்து அன்பறிவு படமும் அங்கே ரிலீஸ் ஆகுமா?..

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அழைத்து வந்து அவரை தன்னோட சொந்தம் என்றும் கன்னட மொழியே தமிழில் இருந்து பிறந்தது தான் என உறவை வளர்க்கும் விதமாக கமல்ஹாசன் பேசியது, பெரும் பிரச்னையை கிளப்பியது.
கன்னட மொழியை தமிழில் இருந்து பிறந்தது என்கிற கருத்தை கர்நாடகா ஏற்கவில்லை, கமல்ஹாசன் இப்படியெல்லாம் பேசி எங்களுடைய மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என எதிர்பாளர்கள் பேசியிருந்தாலே பிரச்னை பெரிதாக ஆகியிருக்காது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது உருவ பொம்மைகளை எதிர்த்து தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் ஏகப்பட்ட அலப்பறைகளை கிளப்பினர். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார் ஆனால், கடைசியில் வழக்கு கமல்ஹாசனுக்கு சாதகமாக படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வந்தது.
தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை என கமல் அறிவித்த நிலையில், அங்கே இருந்து வரவேண்டிய 20 கோடி ரூபாய் ராஜ்கமல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், படம் சரியாக இல்லாத நிலையில், டிசாஸ்டர் ஆகிவிட்டது.
கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் கன்னட மொழி குறித்தும் கர்நாடகா கலாசாரம் உள்ளிட்டவை குறித்தும் இனிமேல் எந்தவித கருத்தையும் கமல்ஹாசன் கூறக்கூடாது என தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் அன்பறிவு மாஸ்டர் படமும் கர்நாடகாவில் வெளியாகவிடாமல் போராட்டம் நடைபெறும் என தெரிகிறது. அனல் அரசு மாஸ்டர் இயக்கிய பீனிக்ஸ் படமே இப்படி இருக்கே அன்பறிவ் மாஸ்டர்கள் இணைந்து இயக்கி வரும் படத்திலும் தக் லைஃப் போல கடைசி வரை கமல் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் எடுபடுமா? என்பதும் டவுட்டாக உள்ளது.