2024ன் மிகச்சிறந்த படம் எது? அமரனா, விடுதலை 2வா? பிரபல தயாரிப்பாளர் சொல்லும் தகவல்
2024 தமிழ்சினிமாவுக்கு மோசமான வருஷம் என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். வேறு என்னவெல்லாம் சொல்கிறார் என்று பார்ப்போம்.
2023 தான் பெஸ்ட் இயர் தமிழ்சினிமாவுக்குன்னு சொல்லலாம். வாரிசு, துணிவுன்னு பொங்கலுக்கே கமர்ஷியல் ஹிட் கொடுத்துருக்கு. லியோ, ஜெயிலர், பொன்னியின் செல்வன்னு எல்லாமே பெரிய வெற்றிகள்தான்.
பெஸ்ட் கலெக்ஷன் 2024
2024ல் கோட் பெஸ்ட் கலெக்ஷன். வேட்டையன், அமரன்னு சில படங்களை மட்டும் தான் நல்ல வசூல்னு சொல்ல முடியும். சில சின்ன படங்கள் நல்ல வெற்றியைக் கொடுத்தது. புளூ ஸ்டார்ல ஆரம்பிச்சி, லப்பர் பந்து வாழையை சொல்லலாம்.
ஐந்தாறு படங்கள் வெற்றி அடைந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்ற முடியாது. இதுவரைக்கும் 225 படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல வெற்றி அடைஞ்சது 8ல இருந்து 10க்குள்ளதான். 4ல் இருந்து 5 சதவீத வெற்றிதான்.
அமரன் ஆக்ஷன் படம் கிடையாது
ஓடிடில என்ன சொல்றாங்கன்னா படம் நல்லா இருந்தா வாங்கிக்கறோம்னு சொல்றாங்க. அமரன் படம் ஒரு அழுத்தமான கதை. அந்தப் படத்தை இப்போ நான் ஓடிடியில பிரேக் எடுக்காமப் பார்க்கிறேன். இது ஆக்ஷன் படம் கிடையாது. டான்ஸ் இல்ல. கமர்ஷியல் பைட் இல்ல. ஒருத்தரு 100 பேரை அடிக்கிற மாதிரி பைட் இல்ல.
அவ்வளவு யதார்த்தமான படம். வாழ்வியில் சம்பந்தப்பட்டது. அது பிரமாமான வெற்றி அடையுது. இந்த வெற்றிக்குக் காரணம், கமல், ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி டீம் தான். அதே மாதிரி மகாராஜா படத்தோட வெற்றியைச் சொல்லலாம். இது சைனால போய் கொண்டாடுற அளவுக்கு வெற்றி அடைஞ்சிருக்கு.
சைனாவில் மகாராஜா
சைனாவுல வெளிநாட்டுப் படங்கள் 36 தான் ரிலீஸ் ஆகும். அங்குள்ள விநியோகஸ்தர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவருக்குப் பிடித்தால் தான் அவர்கள் அங்குள்ள குழுவுக்கு விண்ணப்பிப்பார்கள். அந்தக் குழு ஒரு வருடத்திற்கு 36 படங்களை மட்டும் செலக்ட் பண்றாங்க. அதுல ஒண்ணுதான் மகாராஜா. அவங்க தான் அந்தப் படத்துக்கு ரிலீஸ் தேதியையும் குறிப்பாங்க.
அதனால எல்லா படத்தையும் சைனாவுல ரிலீஸ் பண்ண முடியாது. இந்தப் படத்தோட கதை எல்லா ஊருலயும் கனெக்டிவிட்டியாகுது. அதனால அது எல்லா இடத்துலயும் வெற்றி பெறுகிறது.
வெற்றிமாறன்
வெற்றிமாறனின் மிகப்பெரிய ஃபேன். வெறித்தனமான ரசிகர் நான். ஒரு படத்துக்காக நாலு வருஷம் உழைப்பைக் கொடுக்குறாரு. ஆடியன்ஸ் என் படத்தைப் பார்த்துட்டு உலகத்தரம்னு சொல்லணும். அதுக்காக நான் மெனக்கிடுறேன் என்பார். இந்தப் படத்துக்காக மிகப்பெரிய படமாக மாற்றும் வரை உழைப்பேன்.
அமரன் - விடுதலை 2
எந்த வணிக சமரசமும் இல்லாம என் படத்தைக் கொடுப்பேன்னு வெற்றிமாறன் சொல்றாரு. அதனால தான் அவரு படத்துக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு. அந்த வகையில் இந்த வருஷத்துல அமரன், விடுதலை 2 படத்துக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கு. அமரன் படத்துக்குக் கண்டிப்பா தேசிய விருது கிடைக்கப் போகுது. விடுதலை 2 படமும் மிகச்சிறந்த படமாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன் என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.