2024 ஆம் ஆண்டில் வெளிவந்த தரமான வெப் சீரிஸ்கள்!.. டைம் கெடச்சா கண்டிப்பா பாருங்க!..

by Murugan |   ( Updated:2025-01-01 13:01:08  )
web series
X

web series

2024 ஆம் ஆண்டு பல வெப் சீரிஸ்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஓடிடி தளங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது. ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ் பார்க்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடையும் விடாமல் ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான வெப் சீரிஸ்களில் அதிகம் பாராட்டப்பட்ட வெப் சீரிஸ்கள் பற்றி இதில் பார்ப்போம்.

சட்னி சாம்பார்: கடந்த ஆண்டு வெளியான வெப் சீரிஸ்களில் அதிகம் பாராட்டப்பட்டது. சட்னி சாம்பார் வெப் சீரியஸ் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இந்த தொடரில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் கயல் சந்திரன், வாணி போஜன், இளங்கோ குமரவேல், மைனா நந்தினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். 6 எபிசோடுகளாக வெளியான சட்னி சாம்பார் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது பார்க்கலாம்.


தலைமைச் செயலகம்: ஒரு தரமான அரசியல் கதைக்களத்தை வைத்து வெளியான வெப் சீரியஸ் தலைமைச் செயலகம். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான இந்த தொடரில் ஸ்ரேயா ரெட்டி, கிஷோர் குமார், ரம்யா நம்பீசன், ஒய் ஜி மகேந்திரன், பரத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஒரு அரசியல் கலந்த திரில்லர் தொடராக வெளியான இந்தத் தொடர் வெற்றியடையில் பெருமளவும் கவரப்பட்டது. மொத்தம் 8 எபிசோடுகளாக வெளியான இந்த தொடரை நீங்கள் ஜி5 ஓடிடி தளத்தில் தற்போது பார்க்கலாம்.

ஐந்தாம் வேதம்: இயக்குனர் நாகா இயக்கத்தில் ரிலீஸ் ஆன தொடர் ஐந்தாம் வேதம். 8 எபிசோடு வெளியான இந்த தொடர் ஒரு மர்மமான கதைகளும் கொண்டதாக வெளியானது. இந்த வெப் சீரியஸில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 8 எபிசோடுகளாக வெளியான இந்த தொடரை ஜி5 ஒடிடி-ல் காணலாம்.


கோலிசோடா ரைசிங்: இந்த ஆண்டு வெளிவந்த வெப் சீரியஸ்களில் ரசிகர்களிடையே அதிக அளவு கவனத்தை ஈர்த்தது கோலி சோடா ரைசிங். கோலி சோடா திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இந்த வெப் சீரிஸில் நடித்திருந்தார்கள். இதில் நடிகர் சேரன், சியாம் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் கூடுதலாக நடித்திருந்தார்கள். இந்த சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது.

இன்ஸ்பெக்டர் ரிஷி: பல மர்மங்கள், திருப்பங்கள், திகில் என அனைத்தும் கலந்த ஒரு கலவையாக வெளியான வெப்சீரிஸ் இன்ஸ்பெக்டர் ரிஷி. ஹாரர் கிரைம் விரும்பிகளுக்கு இந்த வெப் சீரியஸ் ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். இந்த தொடரில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணன் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த வெப் சீரியஸ் 10 எபிசோடுகளாக வெளியானது. இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது பார்க்கலாம்.

Next Story