அப்டேட் ஆகுங்க ஷங்கர்!. இப்படியே போனா நீங்க காலி!.. எச்சரிக்கும் பிரபலம்!...
இந்தியன் 2 அளவுக்கு இல்லன்னாலும் ஷங்கர் கம்பேக் கொடுத்துட்டாருன்னு சொல்ற அளவுக்கு கேம் சேஞ்சர் இல்ல. ஆனா அவரோட முந்தைய படங்கள்ல இருந்து இங்க ஒரு சீனு, அங்க ஒரு சீனுன்னு எடுத்துத் தொகுத்த மாதிரி தான் படம் இருக்குது. எல்லாத்துக்கும் மேல ஷங்கர் இன்னும் தன்னை அப்டேட் பண்ணிக்காம இருக்காரு.
கதை தவறு. திரைக்கதையில் சுவாரசியம் இல்லை என்பதை எல்லாம் தாண்டி எனக்குத் தெரிஞ்சி ஷங்கர் இன்னும் 90கள்ல உள்ள மாதிரியே இருக்காரு. இன்னைக்குக் காலம் மாறி இருக்குறது அவரோட கவனத்துக்கே போகல.
எங்குமே நடக்காத விஷயம்: தெலுங்கு படத்தை மனசுல வச்சிக்கிட்டு ஷங்கர் படத்தை இயக்கி உள்ளாரோன்னு தோணுது. கிளைமாக்ஸ் காட்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் முதல் அமைச்சரும், ஐஏஎஸ் அதிகாரியும் கட்டிப்புரண்டு சண்டை போடுறாங்க. இவர் மெஷினை எல்லாம் தூக்கிப் போட்டு உடைப்பாரு.
இதெல்லாம் எங்குமே நடக்காத விஷயம். 50 ரூபாய் நோட்டு பண்டல் பண்டலா இருக்கும். அது மேல இருந்துக்கிட்டு வசனம் பேசிக்கிட்டு இருப்பாங்க. ஆனால் இப்போதெல்லாம் எந்த அரசியல்வாதியும் வீட்டுக்குள்ள கரன்சியாகப் பதுக்கி வைப்பதே இல்லை.
இந்தியன் 3: அந்தமாதிரி காலகட்டத்துல இன்னைக்குக் காலம் மாறி இருக்கு என்பதை ஷங்கர் கணக்கில் எடுத்துக்காம இருக்காரு என்று பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்தியன் 3க்குக் கூட எடுத்தக் காட்சிகளை எல்லாம் போட்டுக் காட்டுங்கன்னு சொன்னதை ஷங்கரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு என ஆங்கர் கேட்க, இதுபற்றி பிஸ்மி சொல்வது இதுதான்.
சினிமாவைப் பொருத்தவரைக்கும் நேற்றைய வெற்றியைக் கணக்கில் எடுத்துக்க மாட்டாங்க. இன்னைக்கு எப்படி இருக்காங்கன்னு தான் பார்க்கும். நேற்றைய வெற்றியைக் கணக்கெடுத்துக்கணும்னா இன்னைக்கும் பாக்கியராஜை திரையுலகம் தலையில் தூக்கி வச்சிக் கொண்டாடும். பாக்கியராஜை எப்படி ட்ரீட் பண்றாங்கன்னு தெரியும்.
இந்தியன் 2: அதனால தான் ஷங்கரா இருந்தாலும் சரி. மணிரத்னமா இருந்தாலும் சரி. இன்றைக்கு இவர் கொடுத்த வெற்றி என்னன்னுதான் திரையுலகம் பார்க்கும். அப்படித்தான் ஷங்கரையும் பார்ப்பாங்க. இன்னும் சொல்லப்போனால் ஷங்கர் அவரது திரைவாழ்க்கையில் இந்தியன் 2க்கு முன்னால மிகப்பெரிய தோல்வியைப் பார்க்கவே இல்லை.
பாய்ஸ் படம் தோல்வி அடைந்தாலும் கமர்ஷியல் தோல்வி அல்ல. இந்தியன் 2க்குப் பிறகு அவரது மார்க்கெட் அவுட் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதனால மீண்டும் அவர் தன்னோட இடத்தைத் தக்க வச்சிக்கிற நெருக்கடி வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.