Connect with us
bharathiraja

Cinema News

கார் டயர் பஞ்சர்… பாரதிராஜாவுக்கு அடித்தது லக்… லேடி சூப்பர்ஸ்டாரே கிடைச்சுட்டாரே..!

லேடி சூப்பர்ஸ்டார்னு சொன்னதும் நயன்தாரான்னு நினைச்சுடாதீங்க. அப்பவே அந்தப் பட்டத்தை ஒரு நடிகைக்கு கொடுத்தாங்க. இப்ப அவங்க ரேஞ்சே வேற. அவர் யாரு? எப்படி தமிழ்சினிமாவுல அறிமுகமானாருன்னு பார்ப்போமா…

தமிழ்சினிமா உலகில் 90களில் லேடி சூப்பர்ஸ்டார்னு அழைக்கப்பட்டவர் விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் அதிரடியாகத் தான் இருந்தன. குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் படம் இப்போது பார்த்தாலும் தெறிக்க விடும்.

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார்

Also read: கமலின் சூரசம்ஹாரம் படத்தில் முதல்ல ஹீரோயினா நடிக்க இருந்தவர் அவரா?அப்பாட…. தப்பிச்சிட்டாரே..!

கந்தவ்யம் என்ற தெலுங்கு படத்தின் டப்பிங் தான் இது. மோகன் காந்தி இயக்கிய இந்தப் படம் 1990ல் வெளியானது. அப்போது விஜயசாந்தியை ‘தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார்’ என்று தான் சொல்வார்கள். தொடர்ந்து இவரது நடிப்பில் வந்த ஆட்டோ ராணி, போலீஸ் லாக்கப் படங்கள் பட்டையைக் கிளப்பின. அடிதடி சண்டைக்காட்சிகளில் அசர வைத்து விடுவார்.

vijayasanthi

vijayasanthi

ரஜினி – கமல்

ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த மன்னன் படமும், கமலுடன் இவர் இணைந்து நடித்த இந்திரன், சந்திரன் படமும் சூப்பர்ஹிட் ஆனவை. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்றும் அந்த அழகிய தருணத்தையும் இப்படி நினைவு கூர்கிறார் பாருங்கள்.

கார் டயர் பஞ்சர்

என் அப்பா தான் நிறைய போட்டோ சூட் எல்லாம் பண்ணி என் போட்டோக்களை ஸ்டூடியோக்களில் கொடுத்து இருந்தார். அப்போ பாரதிராஜா அவர்கள் ஹீரோயின் தேடிட்டு இருந்துருக்காரு. ஒருமுறை பாரதிராஜா சார் கார்ல போகும்போது, அவர் கார் டயர் பஞ்சர் ஆகிடுச்சு. அதனால டிரைவர் கார் ரெடியாகறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்.

பாரதிராஜா

Also read: ஐஸ்வர்யா லட்சுமி மேட்ரிமோனியில மாப்பிள்ளை தேடினாங்களா?!… ஆனா நடந்த சம்பவமே வேற!…

இந்த ஸ்டூடியோவுல போய் உட்காருங்கன்னு சொன்னாராம். அப்போ தான் ஸ்டூடியோவுல என்னுடைய போட்டோகளைப் பார்த்து பாரதிராஜா சாருக்குப் பிடிச்சிப் போச்சு. எனக்கு ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிற வாய்ப்பு அப்படித் தான் கிடைத்தது என்கிறார் விஜயசாந்தி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top