Categories: Cinema News

புதுசா மாடு வாங்கிய பிக்பாஸ் பாலாஜி – கவனத்தை ஈர்க்கும் வீடியோ இதோ!

புதியதாக கார் வாங்கியிருப்பதை வித்யாசமாகி கூறிய பாலாஜி முருகதாஸ்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசனில் மாடல் அழகனாக நுழைந்தவர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்த சீசனில் காதல் மன்னன், பயில்வான், தைரியசாலி, என பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.

மேலும், அவரது கடந்து வந்த பாதை கேட்டு, தன்னை தானே செத்துக்கியவன் பாலாஜி என்றெல்லாம் புகழ் பாடினார்கள். பின்னர் அந்த நிகழ்ச்சியில் ஷிவானியுடன் நெருக்கமாக பழகி காதலில் விழுந்தார். கொஞ்சம் அவப்பெயரையும் சம்பாதித்தார்.

இதையும் படியுங்கள்: நான் இப்போ வேற மாறி… சமந்தாவுக்கு சரியான பதிலடி கொடுத்த முன்னாள் கணவர்…

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி முன்னேறி வரும் பாலாஜி தற்போது புதியதாக bmw கார் ஒன்றை வாங்கி அதை கொஞ்சம் வித்யாசமாக “புதுசா மாடு வாங்கியிருக்கோம்” என கூறி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/CgeDAVLl-x_/

பிரஜன்
Published by
பிரஜன்