
Cinema News
Vijay: நீங்கலாம் என்ன மனுஷன்? விஜயை சரமாரியாக தாக்கி பேசிய பிக்பாஸ் பிரபலம்
Vijay:
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் அறியப்பட்டார் அசீம். அவர் டைட்டில் வின்னர் ஆனதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் மீது இப்போ வரைக்கும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்ராயமே இருந்ததில்லை. அவர்தான் கரூர் விவகாரம் குறித்து விஜயை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியது இதோ:
உங்களைப் பார்க்க வந்த கூட்டம், அந்த கூட்டத்தில் சிக்கி நெரிசலில் இரண்டு மூன்று பேர் மயங்கி விழுகிறார்கள், அதுவும் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே இது நடக்கிறது ,அதை நீங்களும் பார்த்தீர்கள், பார்த்து என்ன பண்ணிங்க ?ஒன்னும் பண்ணல. கரூரிலிருந்து உங்கள் தனி விமானத்தை பிடிப்பதற்காக திருச்சிக்கு போனீங்க .போகும்போது வழியில் உங்களுக்கு போன் கால் வராமலா இருந்திருக்கும்? அதைக் கேட்டு நீங்கள் என்ன பண்ணீங்க? திரும்பி வந்தீங்களா? திருச்சியிலிருந்து சென்னைக்கு போகும்போது வழியில் விமான நிலையத்தில் பத்திரிக்கை நிருபர் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றி கேட்டார்.
அதற்கு எதுவும் பதில் சொன்னீங்களா? புற முதுகு காட்டி கண்டுகொள்ளாமல் சென்று விட்டீர்கள். நீங்க எல்லாம் என்ன சார் தலைவர்? தலைவர விடுங்க நீங்க எல்லாம் என்ன மனுஷன்? உங்களை திரையில் பார்த்து கைதட்டியவன் தானே வந்தான். உங்களுடைய பேச்சையும் உங்களை பார்ப்பதற்காகவும் தானே அங்கு வந்தான். அங்கு சின்ன குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் வந்திருந்தார்கள் .அவர்கள் என்ன உங்களுக்கு ஓட்டு போடவா வந்தார்கள் .வயது முதிர்ந்தவர்கள் வந்தார்கள். கர்ப்பிணி பெண்கள் வந்திருந்தார்கள். வாய் பேச முடியாத பெண்ணும் அங்கு வந்திருந்தார்.
ஒரு சின்ன குழந்தை மிதிபட்டு அதோட கழுத்து எலும்பு உடைந்து போய் இருக்கிறது. கேட்கிற எங்களுக்கே பதைக்கிறது. ஆனால் உங்களுக்கு கொஞ்சம் கூட அதைப்பற்றி கவலையில்லை. நேரடியாக ப்ளைட்டை பிடித்து சென்னை வந்து விட்டீர்கள். இது நடந்தது செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை .ஆனால் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு நான்கு நாட்களா தேவைப்பட்டது? மேடைக்கு மேடை திமுக அது பண்ணுச்சு இது பண்ணுச்சு என்று சொல்றீங்களே ?அந்த திமுக தான் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓடி வந்திருக்கிறார்கள் .சனிக்கிழமை இரவு இந்த செய்தி கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் .

அவரிடம் நிருபர் கேட்கிறார்கள், சார் இதன் காரணமாக விஜயை கைது செய்வீர்களா என கேட்கிறார்கள் .அப்ப கூட முதலமைச்சர் என்ன சொன்னாரு தெரியுமா ?இதை நான் அரசியலாக பார்க்கவில்லை .என்னுடைய தமிழ் மக்கள் இறந்திருக்கிறார்கள். அதை பார்க்கத்தான் வந்திருக்கிறேன் .அவங்க உயிர் தான் எனக்கு முக்கியம். இதையே தான் துணை முதல்வரும் கூறினார். அப்போ நீங்கள் குறை சொன்ன இந்த ஆட்சியில் இருக்கிறவர்கள் தான் இன்று மக்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மக்களுடன் நிற்கவே இல்லை. வெறும் 28 ஆயிரம் பேர் கூடி அந்த கூட்டத்தில் 41 உயிர்கள் இறந்திருக்கிறார்கள் .அதுக்கே உங்களால் நின்னு அதை எதிர்கொள்ள முடியவில்லை.
இதுக்கே உங்களுக்கு தைரியம் இல்லை. நாளைக்கு நீங்கள் பகல் கனவு காண்கிறீர்கள் அல்லவா? நான் முதலமைச்சராகி விடுவேன் என்று. ஒரு வேளை உங்கள் பகல் கனவு படி கனவில் கூட நீங்கள் சிஎம் ஆகி விட்டீர்கள் என்றால் இந்த எட்டிலிருந்து பத்து கோடி மக்களுக்காக நீங்கள் என்ன பண்ணுவீங்க? ஒன்னும் பண்ண போறது கிடையாது. இது மக்களுக்கு தெரியாமல் இருக்குமா? இன்னும் ஒரு வாரம் கழித்து நீங்கள் என்ன பண்ணுவீர்கள் தெரியுமா? மேடையில் அழுவீங்க. இல்ல ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பீங்க. வாய்ப்பு இல்ல ராஜா .மேடைக்கு மேடை நீங்கள் சினிமாவில் பேசுகிற வசனம் அதையே தான் பேசுகிறீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இல்லை .திரையில் மட்டும் தான் ஹீரோ. தரையில் ஹீரோ இல்லை.
ஹீரோன்னு சொல்லும்போது எனக்கு இன்னொரு ஞாபகம் வருகிறது. இன்று திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்களே பல நடிகர்கள். அதில் ஒருத்தர் கூட கரூர் சம்பவத்திற்காக வருத்தத்தை தெரிவிக்கவே இல்லை .ரஜினி கமல் முதல் நாளாக அவர்களுடைய வருத்தத்தை பதிவிட்டு இருந்தனர். ஆனால் மற்ற நடிகர்கள் ஒருத்தர்கூட இதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஏன் உங்களுக்கு பயமா? ஏனெனில் விஜய் ரசிகர்களை பகைத்துக் கொண்டால் நம்முடைய படங்கள் ஓடாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் தான் நீங்கள் வாய் திறக்கவில்லையா ?
சரி நடிகர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் இயக்குனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் .மக்களுக்கு அநீதி நடக்கிறது. சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என படங்களில் பேசிய அந்த இயக்குனர்கள் கூட இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. உங்களுக்கே தெரியும். இங்கு தப்பு விஜய் பக்கம் தான் நடந்திருக்கிறது என்று .விஜய் பற்றி ஏதாவது கருத்து போட்டால் நாளைக்கு நம் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் வர மாட்டார்கள் என்று எண்ணி தான் யாருமே இதைப்பற்றி வாய் திறக்கவில்லை என அசிம் விஜய்க்கு எதிராக பல கேள்விகளை இந்த பேட்டியின் மூலம் எழுப்பி இருக்கிறார்.