1. Home
  2. Cinema News

கமலும் வேண்டாம்.. விஜய்சேதுபதியும் வேண்டாம்.. இவர கொண்டாங்கய்யா? அல்லுவிடும்

kamal
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை இவர்  தொகுத்து வழங்கினால் சரியா வரும்.. யார் தெரியுமா?


தற்போது பலரின் எதிர்மறை கருத்துக்கு ஆளாகியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி. கடந்த எட்டு சீசன்களாக மிகுந்த வெற்றியை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் மூலம் பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க போகிறார் என்று சொன்னதும் அனைவருக்கும் ஒரு பிரமிப்பாக இருந்தது. ஒரு நடிகராக கமல் மீது ஒரு பெரிய மரியாதை அனைவருக்குள்ளும் இருந்தது.

எப்பேற்பட்ட நடிகர்? அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா என்ற வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்தை தூண்டியது. இன்னொரு பக்கம் எப்படி அவர் இந்த மாதிரி சின்னத்திரைக்குள் வர முடிந்தது? என விசாரிக்கும் போது கமலுக்கு இதற்காக ஒரு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது. வாரத்திற்கு இரண்டு நாள், அப்போ மாதத்திற்கு எட்டு நாள்கள்தான். ஆனால் சம்பளமோ பல கோடி.

ஆனாலும் கமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எப்பேற்பட்ட ஒரு பெரிய ஆளுமையாக இருக்கிறார் என்பதை புரியவைத்தார். சும்மா போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் வாங்கினார். முறைத்து பார்த்தாலே போட்டியாளர்கள் பயந்து விடுவார்கள் வார இறுதியில் கமல் வருகிறார் என்றாலே ஐயோ இன்னைக்கு யாரை ரோஸ்ட் செய்ய போகிறாரோ என்ற பயத்துடன் தான் போட்டியாளர்கள் லிவ்விங் அறையில் உட்கார்ந்திருப்பார்கள்.

ஆனால் இந்த சீசனில் விஜய்சேதுபதிக்குண்டான மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அவர் நின்று கொண்டு பார்க்க உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் போட்டியாளர் விஜய்சேதுபதிக்கு மரியாதை கொடுக்காமல் உட்கார்ந்து கொண்டே பேசுகிறார். கொஞ்சம் எழுந்திருங்கள் என்று சொன்ன பிறகே அந்த போட்டியாளர் எழுந்திருக்கிறார்.

கமல் அளவுக்கு விஜய்சேதுபதியால் போட்டியாளர்களை ஹேண்டில் செய்ய தெரியவில்லை. அதே நேரம் கமலை போல விஜய்சேதுபதிக்கும் உலக அறிவு இருக்கிறது. சித்தாந்தம் தெரிந்தவர் விஜய்சேதுபதி. இப்படியே போனால் விஜய்சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார். இப்பொழுது இருக்கும் போட்டியாளர்களை சமாளிக்க சரியான ஆள் நடிகர் மன்சூர் அலிகான் தான்.

mansoor

அவர் ஒரு பக்கம் கோமாளியாக ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பார். இந்த சீசனில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் உண்மையிலேயே கோமாளிகளாகத்தான் இருக்கிறார்கள். மன்சூர் அலிகான் வந்தால் தான் மொத்தமாக இந்த நிகழ்ச்சியை இழுத்து மூட சரியாக இருக்கும். ஆனால் எந்த சீசனுக்கும் இல்லாத வகையில் இந்த சீசனுக்குத்தான் அதிகளவு எதிர்ப்பலைகள் கிளம்பியிருக்கின்றன.

விஜய்சேதுபதியால் ஒன்றும் பேச முடியவில்லை. அதை நடத்துகின்ற நிறுவனம் கையில்தான் எல்லாம் இருக்கின்றன. இப்படியே போனால் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை கண்டிப்பாக தொகுத்து வழங்குவது மன்சூர் அலிகான் தான் என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.