Bison: மாரி செல்வராஜை பாத்து லோகேஷ் கத்துக்கணும்!.. கம்பு சுத்தும் நெட்டிசன்கள்!....

Bison: ஒவ்வொரு திரைப்பட இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. ஒருவர் ஜாலியான படம் எடுப்பார். ஒருவர் சீரியஸான காதல் கதை எடுப்பார். ஒருவர் அதிரடியான ஆக்சன் படங்களை எடுப்பார். ஒருவர் மெசேஜ் சொல்கிறேன் என்கிற பெயரில் சமூக கருத்துக்களை கொண்ட படங்களை எடுப்பார். எல்லா வகையான ரசிப்பு தன்மையும் கொண்ட ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்கு பிடித்த இயக்குனர்கள் படங்களை அவர்கள் பார்க்கிறார்கள். பொதுவான ரசிகர்கள் எல்லா படங்களையும் பார்ப்பதுண்டு.
அதேநேரம் சினிமாவில் ஒப்பீடு என்பதை தவிர்க்கவே முடியாது. கோலிவுட்டில் சீரியஸான சினிமாக்களை எடுத்து வருபவர் மாரி செல்வராஜ். கடந்த பல வருடங்களில் பரியேறும் பெருமாள், மாமன்னன், வாழை, கர்ணன் என எல்லா படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த பிரச்சனைகளை தனது படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனாலேயே இவரின் படங்கள் விவாதங்களை ஏற்படுத்துவண்டு.
தற்போது அவர் இயக்கத்தில் பைசன் காளமாடன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தென் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞன் கபடி போட்டிகளில் சாதிக்க நினைக்கும் போது அவன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. நிஜ கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது துருவின் சினிமா திரையரிலும் இது முக்கிய படமாக அமைந்திருக்கிறது. ஒரு பக்கம் ஜனரஞ்சகமான ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். ஆக்சன் படங்களை விரும்பும் இளைஞர்களுக்கு இவரின் படங்கள் ஃபேவரைட்டாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘ஒரு திரைப்படத்தால் எந்த ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது’ என பேசி இருந்தார். தற்போது பைசன் படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த சிலர் திரைப்படங்களால் ‘லோகேஷ் கனகராஜ் பைசன் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் அவரது கருத்தை மாற்றிக் கொள்வார். சினிமா சமூகத்தில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்து கொள்வார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.