Bison: பைசன் பார்த்துட்டு மாரி செல்வராஜுக்கு போன் போட்ட ரஜினி!.. சொன்னது இதுதான்!...

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட தனது சமூகத்தை சார்ந்த மக்களின் வாழ்வியல்களை, அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை தொடர்ந்து திரைப்படங்களில் பேசி வருகிறார். உயர் ஜாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை எந்த அளவுக்கு ஒடுக்குகிறார்கள் என்பதை பல விதமான கதைகள் மூலம் சொல்லி வருகிறார். இதனாலே சாதியவாதிகளுக்கு பிடிக்காதவராக மாரி செல்வராஜ் இருக்கிறார்.
அவர்கள் மாரியை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ‘எப்போதோ நடந்ததை இப்போது ஏன் காட்ட வேண்டும்? இப்போது அந்த அளவுக்கு யாரும் சாதி பார்பப்து இல்லை’ என அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் ‘என் சமூக மக்கள் சந்தித்த வலிகளை நான் பேசுவேன்.. உங்கள் வாழ்க்கை வேறு.. என் வாழ்க்கை வேறு.. உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை பார்க்காதீர்கள்.. நான் என் சமூக மக்களின் பிரச்சனைகளை சாகும் வரை சொல்வேன்.. தற்போதும் பல இடங்களில் சாதி பிரச்சனைகள் இருக்கிறது’ என்பதே மாரியின் வாதமாக இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் பைசன். தென் மாவட்டத்தில் வசிக்கும் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் 30 வருடங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் இருந்த இது சாதி தலைவர்களுக்கிடையே நடந்த சம்பவங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் கபடி வீரராக துருவிக்ரம் நடித்திருக்கிறார். இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 5 நாட்களில் படம் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
இந்நிலையில் பைசன் படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ் ‘சூப்பர் மாரி.. சூப்பர்.. உங்களின் பைசன் பார்த்தேன்.. படத்திற்கு படம் உங்களின் உழைப்பும், ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்’ என சூப்பர் ஸ்டார் தன்னை பாராட்டியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மேலும் ‘எனது முந்தைய நான்கு படங்களை பாராட்டியது போலவே பைசன் படத்தையும் பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் போனில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும், படக்குழு சார்பாகவும் நன்றி’ என உருகியிருக்கிறார் மாரி.