கஷ்டப்பட்டு நடிச்சவரு கவின்! ‘பிளடி பெக்கர்’ டிரெய்லரால் அஜித்துக்கு கிடைச்ச பேரு

by rohini |
ajithkavin
X

ajithkavin

சிவபாலன் முத்துக்குமரன் இயக்கத்தில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் திரைப்படம் பிளடி பெக்கர். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தின் மூலம் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

பிளடி பெக்கர் திரைப்படம் ஒரு முழு நீள திரில்லிங்கான டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் கவின் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு உண்மையிலேயே பிச்சைக்காரன் போல் தெரிவதற்காக கவின் 20 நாள் நிஜமாகவே பிச்சை எடுத்ததாக தகவல் வெளியானது.

அவருடைய அந்த உழைப்பின் பலன் ட்ரெய்லரில் நன்றாகவே தெரிகிறது. பிச்சைக்காரன் எப்படி எல்லாம் நடப்பான் இருப்பான் அவனுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்டி இருக்கிறார் கவின். படத்தின் டிரைலரில் ஒரு வெள்ளை மாளிகைக்குள் நுழையும் கவின் அங்கு இருக்கும் ஆடம்பரப் பொருட்களை எல்லாம் பார்த்து ஆச்சரியமடைகிறார்.

அந்த நேரத்தில் சில வில்லன் கும்பல்கள் உள்ளே வர அவர்களால் கவின் படும் பாடு தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது ட்ரைலரை பார்க்கும் பொழுது தெரிகிறது. இந்த ட்ரெய்லர் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் தான் ட்ரைலரை பெருமளவு கொண்டாடி வருகிறார்கள்.

அது மட்டும் அல்ல. இந்த படத்தை நாங்கள் ஓட வைக்கிறோம் என்பது போல கமெண்ட்களை கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் ட்ரெய்லரில் வந்த ஒரே ஒரு டயலாக் தான். டிரைலரில் ஒரு சீனில் கவின் கடவுளே என கூறியிருப்பார். இந்த ஒரு டயலாக் தான் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் இந்த ட்ரெய்லரின் மீது கவனத்தை திருப்பி இருக்கிறது.

சமீப காலமாக அஜித்தே கடவுளே என அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வைரலாக்கி வந்தனர் .அஜித்தை ஒரு கடவுளாகவே அவர்கள் நினைத்து வருகிறார்கள். கடவுளே என்று சொல்லும் போதெல்லாம் அஜித்தே என எங்கு பார்த்தாலும் அந்த ஒரு வசனம்தான் வைரலாகி வருகிறது.

அதற்கேற்ற வகையில் இந்த படத்தின் டிரைலரிலும் கவின் கடவுளே என கூறியது அஜித்தை தான் ஞாபகப்படுத்துகிறது. அதனால் அஜித் ரசிகர்கள் சார்பாக இந்த படம் வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கூறி தங்களது ஆதரவையும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

Next Story