அதுதான் தலீவரின் சாணக்ய தந்திரம்!.. ரஜினியை விடாம வம்பிழுக்கும் புளூசட்ட!…
ரஜினியை நக்கலடிக்கும் மாறன்:
Rajinikanth: ரஜினி என்ன பேசுகிறார் என்பதை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறார். ரஜினியை விமர்சிப்பதை முழுநேர வேலையாகவே அவர் வைத்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி வராமல் போனது முதல் அவர் விமான நிலையங்களில் கொடுக்கும் பேட்டி, சினிமா விழாக்களில் பேசுபவை என எல்லாவற்றையும் தொடர்ந்து நக்கலடித்து வருகிறார் மாறன்.
இதனால் ரஜினி ரசிகர்கள் அவரை சகட்டுமேனிக்கு திட்டினாலும் அதற்கு பதிலடி கொடுக்கிறாரே தவிர ரஜினியை நக்கல் அடிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. ரஜினி எப்போது நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தாரோ அதன்பின் விமான நிலையங்களிலும் அல்லது வேறு இடங்களிலோ செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்டால் ‘No Comments' என சொல்லிவிட்டு போய்விடுவார். ஆனால் அதேநேரம் அரசியல் தொடர்பான விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் அரசியல் தொடர்பாக எதையாவது பேசுவார்.
ரஜினி பேசும் அரசியல்:
திமுக விழாவில் கலந்து கொண்டு ‘இந்த அமைச்சர்களை எல்லாம் முதல்வரும் ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறாரோ.. பல ஓல்ட் ஸ்டூடென்ஸ் கிளாஸ் ரூமை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்’ என்றெல்லாம் பேசி துரைமுருகன் போன்ற அமைச்சர்களின் கோபத்தை கோபத்திற்கு ஆளானார்.
சமீபத்தில் இளையராஜாவுக்கு தமிழக அரசு எடுத்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி ‘2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே இருக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் புதிதாக வந்த கட்சிகள் என யாராக இருந்தாலும் ‘வாங்க ஒரு கை பார்க்கலாம்’ என நம்பிக்கையோடு ஸ்டாலின் இருக்கிறார் என ரஜினி பேசினார்.
தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வி;
ஆனால் இன்று ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினியிடம் நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டார். ‘நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?’ என கேட்க ‘நோ கமெண்ட்ஸ்’ என சொல்லிவிட்டு போய்விட்டார் ரஜினி.
இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள புளூசட்டை மாறன் ‘மற்றவர்கள் நடத்தும் அரசியல் சம்பந்தம் இல்லாத மேடைகளில்தான் அரசியல் பேசுவார்.. விமான நிலையத்தில் மைக் நீட்டினால் ‘நோ கமெண்ட்ஸ்’.. தட் இஸ் தலீவரின் சாணக்கிய தந்திரம்’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.
