சூரி கூட திட்றாரு!.. ஆனா, இவரெல்லாம் பெரிய மனுஷனா?!.. ரஜினியை பொளக்கும் புளூசட்ட மாறன்!..

ஒரு நடிகர் மீது ரசிகர் வைக்கும் அன்பு என்பது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். எல்லை மீறிப்போகும்போது அபத்தமான பல விஷயங்கள் அரங்கேறும். எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி, விஜய், அஜித் வரை அப்படிப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சாட்டையால் அடித்தபோது சில ரசிகர்கள் தியேட்டரில் தங்களை சாட்டையால் அடித்துக்கொண்டனர்.
தனக்கு பிடித்த நடிகரின் படம் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரில் பேனர் வைப்பது, அந்த பேனருக்கு பாலாபிஷேகம் செய்வது என பல வேலைகளை ரசிகர்கள் செய்வார்கள். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என சில நடிகர்கள் தங்களின் ரசிகர்களை கண்டிப்பார்கள். சில நடிகர்கள் அதை செய்யமாட்டார்கள். விஜயின் ரசிகர்கள் எல்லாம் பல வருடங்களாக இதை செய்து வருகிறார்கள்.
ஆனால், விஜய் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என சொன்னதே இல்லை. ஆனால், அஜித் இதற்கு நேரமாறானவர். நடிப்பது என் தொழில். என்னை ஒரு நடிகனாக மட்டுமே பாருங்கள். சினிமா பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. மற்றபடி உங்கள் வேலையை பாருங்கள் என தொடர்ந்து சொல்லி வருகிறார். 1980 முதலே ரஜினிக்கும் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிக்குதான் அதிக ரசிகர்கள் உருவானார்கள்.
சில சமயம் ஒரு நடிகரின் ரசிகர்கள் செய்வது சர்ச்சையாக மாறிவிடும். இதில், ஆந்திர, கர்நாடக சினிமா ரசிகர்களை அடித்துக்கொள்ளவே முடியாது. ஆட்டை வெட்டி அந்த ரத்தத்தை போஸ்டரில் தெறிக்கவிடுவார்கள். காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சூரிக்கும் இப்போது ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
அவரின் மாமன் படம் நேற்று வெளியானது. அப்போது மதுரையை சேர்ந்த சூரியின் ரசிகர்கள் மாமன் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மண் சோறு சாப்பிட்டனர். இந்த செயலை சூரி கடுமையாக கண்டித்திருந்தார். இது முட்டாள்தனம். மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா?. நான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவன். இந்த காசுக்கு நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என சொன்னார்.
இந்த செய்தியை தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து ‘நேத்து ஹீரோவான சூரி கூட தன் ரசிகர்கள் மண் சோறு சாப்பிடறது முட்டாள்தனம்னு கண்டிக்கிறாரு. 50 வருசமா உங்க படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் மண் சோறு சாப்பிடுறாங்க. அதை கண்டிக்க வாய் வரல. நீங்கலாம் ஒரு பெரிய மனுசனா?’ என மீம்ஸ் போட்டு ரஜினியை கலாயத்திருக்கிறார்.