லோகா ஹிட்டுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சூர்யா!.. நக்கலடித்த புளூசட்ட மாறன்..
Suriya: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சூர்யா. கடந்த பல வருடங்களாகவே சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை. தியேட்டரில் வெளியான இவரின் கடைசி ஹிட் படம் சிங்கம் 2 என்றுதான் சொல்லப்படுகிறது. அதன்பின் இவரின் பல படங்கள் வெளியானாலும் அவை பெரிய வெற்றியை பெறவில்லை. ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை கவர்ந்த படங்களாக இருந்தாலும் அவை தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு ஹைப் ஏற்றப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களை தவறவில்லை. எனவே தோல்வி படமாக அமைந்தது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ரெட்ரோ படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை. எனவே ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார் சூர்யா. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு திரைப்படம் அவருக்கு ஹிட் படமாக அமையும் என்றாலும் அந்த படம் எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில்தான் சமீபத்தில் மலையாளத்தில் உருவாகி தமிழ் மொழியிலும் வெளியாகி ஹிட்டடித்த லோகா படத்தின் வெற்றியை சூர்யாவும் கொண்டாடி இருக்கிறார். எப்படியெனில் லோகா படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சூர்யா ஷூட்டிங்ஸ்பாட்டில் கேக் வெட்டி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள புளூசட்டை மாறன் ‘தமிழ் இயக்குனர்கள் எல்லாம் என்னை கவுத்துட்டாங்க.. சிங்கம்தான் என்னோட கடைசி வெற்றி.. அதனாலதான் இப்ப மலையாளம், தெலுங்கு டைரக்டர்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். லோகாவை 5 பாகமா எடுக்கறதா கேள்விப்பட்டேன். அதுல எனக்கு மெயின் ரோல் இல்லனாலும் ரோலக்ஸ் மாதிரி ஒரு கேமியோ கொடுத்து உங்களோடு என்னையும் சேர்த்துக்கோங்க. அதுக்குதான் இந்த கேக் கட்டிங்.. பாராட்டுலாம்.. அண்ணனை மறந்துராதிங்கப்பா’ என சூர்யா சொல்வது போல பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.
‘லோகா படத்தில் அவர்கள் பணிபுரிந்ததற்காக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சூர்யா கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவரின் பெருந்தன்மையான மனசை பாராட்டாமல் நக்கலடிப்பது தவறு. நடிகர்களுக்கு ஹிட் படங்களும், தோல்வி படங்களும் மாறி மாறி அமையும். அதை வைத்து இப்படி எல்லாம் நக்கல் அடிக்கக் கூடாது’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
