தில் இருந்தா நீங்க விக் இல்லாம நடிங்க!.. ரஜினியை வம்பிழுக்கும் புளூசட்ட மாறன்…
Coolie Rajini: பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் பல வருடங்களாகவே ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விஜய்யை பார்த்து ரஜினிக்கு பயம். விஜய் சினிமாவில் உச்சம் தொட்டாலும் பயம்.. விஜய் அரசியலுக்கு போய் ஜெயித்தாலும் ரஜினிக்கு பயம்.. மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்தாலும் பயம்.. என்றெல்லாம் ஏற்கனவே பலமுறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானாலும் மாறன் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. ரஜினியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ரஜினி என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அதை விமர்சிப்பவர் இவர். இந்நிலையில் கூலி பட ஆடியோ விழாவில் அப்படத்தில் நடித்துள்ள சௌபின் சாகிர் பற்றி ரஜினி பேசியதை மாறன் விமர்சித்திருக்கிறார்.
அந்த விழாவில் பேசிய ரஜினி ‘எனக்கு வில்லன் சௌபின் சாகிர் என்ன லோகேஷ் சொன்னார். என்னடா இது? வழுக்கு தலையாக இருக்கிறார்.. யார் இவர்?.. எனக்கு எப்படி இவர் வில்லனாக நடிப்பார்? என்றெல்லாம் யோசித்தேன்.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக சொன்னதால் ஏற்றுக் கொண்டேன்’ என பேசி இருந்தார்..
இதுபற்றி விமர்சித்துள்ள புளூசட்ட மாறன் ‘75 வயதிலும் நீங்க டோப்பா வச்சிதான் நடிக்கிறீங்க.. ஆனால் முடியை நம்பி சௌபின் சாகிர் நடிப்பதில்லை. அவர் தனது நடிப்பையும், தனது திறமையை மட்டுமே நம்புகிறார்.. Iyobinte Pusthagam, Sudani from Nigeria, Kumbalangi Nights
ஆகிய படங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட நடிகர் என்று உங்களுக்கு புரியும்.. பகத் பாசிலுக்கு கூட நடிக்க வந்த போது அவரின் தலையில் முடி குறைவாக இருந்ததை பலரும் கிண்டல் செய்தனர்.
ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் தன்னை நம்பி, தனது திறமையை நம்பி தலையில் விக் வைக்காமல் நடித்து இப்போது இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்
. உங்களுக்கு தில் இருந்தா டோப்பா வைக்காமல் நடிங்க ரஜினி.. மற்றவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்’ என பதிவிட்டு இருக்கிறார்.
