ஒல்லியா..குடுமி வச்சுக்கிட்டு.. இவர தெரியுமா? சிம்புவை வசமாக கலாய்த்த ப்ளூசட்டைமாறன்

by ROHINI |
simbu
X

simbu

தற்போது சிம்பு குறித்த செய்தி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கோலியை சந்தித்ததன் அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சிம்பு. அது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது விராட் கோலி வளர்ந்து வரும் நேரத்தில் அவருடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்து சிம்பு இவர் ஒரு காலத்தில் அடுத்த சச்சினாக வருவார் என கூறினாராம்.

அதன் பிறகு ஒரு சமயம் கோலியை சந்திக்க கூடிய வாய்ப்பு சிம்புவுக்கு கிடைத்திருக்கிறது. அப்போது ஹாய் என கைநீட்டி இருக்கிறார் சிம்பு. அதற்கு கோலி ஹு ஆர் யூ என கேட்டாராம். நான்தான் சிம்பு என இவர் சொல்ல எனக்கு தெரியாது என சொல்லிவிட்டாராம் கோலி. இதைப்பற்றி சிம்பு அந்த பேட்டியில் கூறும்பொழுது அவர் அப்படி சொன்னதும் இந்த அசிங்கம் உனக்கு தேவையா என நானே என்னிடம் கேட்டுக் கொண்டேன்.

simbu

ஒரு நாள் என்னையும் அவருக்கு தெரியவரும் என என் மனதில் நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு சமீபத்தில் என்னுடைய பத்து தல படத்தில் வரும் நீ சிங்கம்தான் பாடல் தான் அவருடைய ஃபேவரைட் என்று அவர் சொல்லும் பொழுது இது போதும். இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி என நான் நினைத்துக் கொண்டேன் என சிம்பு கூறி இருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

இதைப் பற்றி ப்ளூ சட்டை மாறன் அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் சிம்புவை கலாய்த்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். ஒல்லியா குடுமி வச்சுக்கிட்டு கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு பல வருஷமா கோடம்பாக்கத்துல சுத்திட்டு இருக்காரு. அந்த பிரபல நடிகரை உங்களுக்கு தெரியுமா என்ற பதிவை பதிவிட்டு வடிவேலு குறித்த மீம்ஸ் புகைப்படத்தையும் போட்டு இருக்கிறார்.

simbu

அது மட்டுமல்ல சிம்பு இதைப் பற்றி அந்த பேட்டியில் கூறியதை எ ‘ன்னப்பா இது தமாசான உருட்டா இருக்கு. தெரியலன்னா தெரியலன்னு தானே சொல்லுவாரு. வடநாட்டு பிரபலங்களுக்கு ரஜினி கமல் விஜய் அஜித் மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் போன்ற சிலரைத்தான் தெரியும். அதுக்கு ஏன் காமெடி சவால்’ என்றும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கிறார்.

Next Story