அந்த மேட்டர டெலிட் பண்ணுடா கொய்யா!.. விஜய்யை விடாமல் பங்கம் செய்யும் புளூ சட்டை!..

by Ramya |   ( Updated:2024-12-30 10:53:29  )
vijay tvk
X

vijay tvk

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். முதலில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்தார்.

அதிலும் முதல் மாநாட்டிற்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கின்றார் நடிகர் விஜய். தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார் சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

ஆளுநர் சந்திப்பு:

இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருக்கின்றார். இவர்களின் சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.


புளூ சட்டை விமர்சனம்:

தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய் சமீப நாட்களாக எந்த ஒரு விஷயத்திற்கும் வெளியில் வராமல் இருப்பது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அரசியல்வாதியாக விஜய் வொர்க் ப்ரம் ஹோம் செய்து வருகின்றார் என்றெல்லாம் தொடர்ந்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகரான புளூ சட்டை மாறன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விஜயின் செயலுக்கு தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்து வருகின்றார். கடந்த 28ஆம் தேதி விஜயகாந்தின் முதல் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதற்கும் நடிகர் விஜய் வராததற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது ஆளுநரை சந்தித்தது தொடர்பாகவும் விமர்சனத்தை முன் வைத்திருக்கின்றார். ஆளுநரை சந்தித்து விட்டு மொத்த மீடியாவும் விஜய்க்காக காத்திருந்தும் பதில் தராமல் கிளம்பி விட்டார். மீடியாவின் கேள்விகளை எதிர்கொள்ள இப்படி பயப்படுகிறார். எத்தனை நாள் தான் எஸ்கேப் ஆவிங்க ப்ரோ? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

அதனை தொடர்ந்து மற்றொரு பதிவில் ஆளுநரிடம் தலைவர் விஜய் கொடுத்த மனுவை விமர்சித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' எல்லாத்தையும் டைப் பண்ணிட்டியா? பண்ணிட்டேன் தலைவா.. ஒரு தடவை படி.. சட்ட ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, புயல் நிவாரணம், கேரளா மருத்துவக்கழிவு..' கடைசி பாயிண்ட் எதுக்கு சேர்த்த? அதுவும் தமிழக மக்கள் பிரச்சனை தான் தலைவா?


அதை டெலிட் பண்ணுடா கொய்யா.. எனக்கு அந்த ஸ்டேட்ல ரசிகர்கள் ஜாஸ்தி. முக்கியமான கலெக்சன் சென்டர். அதுல மண்ணை அள்ளி போட்றாத! என்று நடிகர் விஜய் அந்த மனுவை கொடுப்பதற்கு முன்பு இப்படித்தான் பேசியிருப்பார் என்பதை யூகமாக விமர்சித்து இருக்கின்றார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story