சீமானே சைலன்ட் ஆயிட்டாரு!.. ஆனா இவரு விடமாட்டார் போல.. விஜய நான் ஸ்டாப்பா அடிக்கிறாரே!..

by Ramya |
vijay
X

vijay

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். ஒரு திரைப்படத்திற்கு 200 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இவரை வைத்து படம் இயக்குவதற்கு தொடர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அரசியலில் இறங்கி இருக்கின்றார்.

தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 இந்த திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தான் இவரின் கடைசி படம் என்று கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்திருக்கின்றார். பின்னர் தனது கட்சியின் கொடி, கொள்கை என அனைத்தையும் அறிமுகம் செய்தார்.


முதல் மாநாடு:

நடிகர் விஜய் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டை நடத்தி முடித்திருந்தார். இந்த மாநாட்டில் திமுக குறித்து காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். மேலும் நம் முதல் எதிரியின் திமுக தான் என்று கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து திமுகவை சார்ந்த அமைச்சர்கள் பலரும் நடிகர் விஜய் மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் நடிகர் விஜய் தாக்கி பேசி வருகிறார்கள்.

சீமான் காட்டம்:

நடிகர் விஜய்யின் மாநாடு முடிந்த சமயத்தில் அதிகமாக விமர்சனங்களை முன்வைத்து வந்தது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். தொடர்ந்து நடிகர் விஜயை மிகவும் மோசமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதள பக்கங்களில் சீமானை திட்டி தீர்த்து வந்தார்கள். ஆனால் தற்போது அவரே சற்று அமைதியாக இருந்து வருகின்றார். பெரிய அளவில் நடிகர் விஜய் குறித்து எந்த இடத்திலும் பேசாமல் இருந்து வருகின்றார்.

திண்டுக்கல் லியோனி:

திமுக கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி தொடர்ந்து கிடைக்கும் மேடைகளில் எல்லாம் நடிகர் விஜய் நான் ஸ்டாப்பாக குறிவைத்து சார் பேசி வருகின்றார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லியோனி கூறி இருந்ததாவது: 'கோட் என்றால் என்ன ஆடு? இந்த ஆட்டுக்கும் அந்த ஆட்டுக்கும் ஒரு கூட்டு இருக்கின்றது.


பாஜகவின் கைத்தறியாக திராவிட மாடலை பேசுவதற்கு வந்திருக்கக்கூடிய அந்த நடிகர் தொடங்கி இருக்கின்ற கட்சியை தூள் தூளாக ஆக்கப் போகின்ற கட்சி திமுக தான்' என்று கூறியிருந்தார். மேலும் ஆடு என்று நடிகர் விஜய்யையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் இணைத்து பேசியிருந்தார். இது நேற்று முதல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டை மாறன்:

இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'தமிழக வெற்றிக்கழக மாநாடு முடிந்த மறுநாளில் இருந்து விஜய் அதிகம் வசை பாடியவர் சீமான். அவர் கூட தற்போது அதை குறைத்துக் கொண்டார்.

ஆனால் திண்டுக்கல் லியோனி ஒய்ந்த பாடில்லை. எல்லா மேடைகளிலும் விஜய் தான் இவரது டார்கெட்.. உங்கள ரேஞ்சுக்கு அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தான் பிரதான எதிரிகள்ட்ட சொல்றீங்க.. ஆனா இப்படி நான் ஸ்டாப்பாக விஜயை குறி வைத்து ஏன் சார் உங்க ரேஞ்ச குறைச்சு இருக்கீங்க' என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

Next Story