bluesattaimaran
எஸ்ஆர் பிரபு நேற்று விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்த நிலையில் அதற்கு ப்ளூ சட்டை மாறன் பதில் கொடுத்துள்ளார்.
சினிமா திரையுலகில் ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றொரு நடிகரின் ரசிகர்களுடன் மோதிக் கொள்வது என்பது சகஜமாக நடக்கும். நடிகர்களும் பலமுறை இதை சொல்லிக் கொண்டு இருந்தாலும் ரசிகர்கள் அதை கேட்பதில்லை. கங்குவா படத்தின் வெளியிட்டுருக்கு பிறகு சூர்யா ரசிகர்களை பலரும் ட்ரோல் செய்து வந்தார்கள். சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா.
கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா எந்த திரைப்படத்திலும் கவனம் செலுத்தாமல் இந்த படத்திற்கு மட்டுமே முழு உழைப்பையும் கொடுத்தார். இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். மேலும் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மாறி மாறி படக்குழுவினர் படத்தைக் குறித்து பில்டப் மேல் பில்டப் கொடுத்து ஓவர்ஹைப் ஏற்றி வைத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் சுடசுட அப்டேட்… இன்னுமா முடியலை…
ஆனால் முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. படத்தின் பின்னணி இசை மற்றும் திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. பெரும்பாலான ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே கூறி வந்தார்கள். இதனால் சூர்யாவின் மனைவி ஜோதிகா திட்டமிட்டு கங்குவா படத்தை காலி செய்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இருந்து முதல் நாள் முதல் காட்சி குறித்து ரசிகர்களின் விமர்சனங்களை பதிவு செய்வதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதி வழங்கக் கூடாது என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதற்கு பிறகு விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனர் எஸ்ஆர் பிரபு கூறி தான் இப்படி ஒரு அறிக்கை வெளியாகி இருக்கின்றது என்று கூறி வந்தார்கள்.
bikil
இதற்கு எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ‘ஒரு அடி திருப்பி அடிச்சதுக்கே 5 வருஷமா கதறிக்கிட்டு இருக்கீங்க. மக்கள் பணி இன்னும் நிறைய இருக்கு.. போய் அண்ணனுக்கு துணையா அடுத்த வேலைய பாருங்கடா.. நல்ல மனுஷன் அவர் பேர கெடுத்துட்டு திரியாதீங்க’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவினை அவர் பிகில் மற்றும் கைதி திரைப்படத்தின் ரிலீஸை ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இதனால் ஆர்எஸ் பிரபுவின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘2013 பொங்கலுக்கு கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் என்கின்ற அமர காவியம் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் வந்து மெகா ஹிட் கொடுத்து அலெக்ஸ் பாண்டியன் கதறவிட்டது.
பிகில் மற்றும் கைதி இரண்டு படங்களுமே வெற்றி படங்கள் தான். பிகிலை கைதி கதறவிட்டது என்பது பொய். சொல்லனும்னா அமரன்தான் கங்குவாவை கதறவிட்டு இருக்கின்றது. சத்தியம் மெயின் ஸ்கிரீனில் கங்குவை தூக்கிவிட்டு அமரன் திரைப்படம் ஓடுகின்றது. வசூலிலும் கங்குவாவை விட பல மடங்கு அதிகம் வசூல் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் கங்குவா வெளியீட்டுக்கு இரண்டு வாரங்கள் முன்பு வந்த படம் தான் அமரன்.
இதையும் படிங்க: விஜய் 69 படத்தில் சத்யராஜிக்குப் பதிலாக அந்த நடிகரா? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்
ஆங்காங்கே சோ பிரேக் ஆகும் தகவலும் இருக்கின்றது. 5 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையை தூக்கிட்டு வரணுமா? அதுவும் பிகிலை கைதி கதறவிட்டது என்னும் பொய் தகவல். ஒரு பேச்சுக்கு அது உண்மையாக இருந்தாலும் ஒரு தயாரிப்பாளர் தன் படம் இன்னொரு படத்தை கதறவிட்டது என்று கூறுவது சரியா? ஏற்கனவே கோவில் உண்டியல், அக்னி கலசம் உள்ளிட்ட சர்ச்சைகளால் எதிர்ப்பை சம்பாதித்தது போதாதா? இப்போது விஜய் ரசிகர்களின் எதிர்ப்பையும் சேர்த்து கொள்ள வேண்டுமா என்று பகிர்ந்து இருக்கின்றார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…