3 மடங்கு சொன்னாரு!.. இங்க கால்வாசிக்கே முக்குது.. அட்லீயை வறுத்தெடுத்த புளு சட்டை..!
இயக்குனர் அட்லீ: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக தனது திரைப்படத்தை தொடங்கிய அட்லி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே மிகப் பெரிய வெற்றியை கொடுத்த அட்லி தொடர்ச்சியாக நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லி அங்கு நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் நயன்தாராவை வைத்து முதல் படத்தை இயக்கிய அட்லி அதே சென்டிமென்டை பாலிவுட்டிலும் பயன்படுத்தினார். அதுவும் சரியாக ஒர்க் அவுட்டாகி இருந்த நிலையில், படம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால் பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டார் இயக்குனர் அட்லீ.
இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக களம் இறங்கிய அட்லீ. தனது உதவி இயக்குனரான காலிஸ் இயக்கத்தில் தெறி திரைப்படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
தெறி படத்தின் இந்தி ரீமேக்கை பலரும் பார்த்திருந்த நிலையில் அந்த படத்தை அப்படியே காப்பி அடித்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் படத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக ஏகப்பட்ட செலவு செய்து படத்தை புரமோஷன் செய்திருந்தார் தயாரிப்பாளர் அட்லீ. ஆனால் படம் படுதோல்வியை அடைந்ததால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழில் தெறி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் ஹிந்தியிலும் ஹிட் அடித்து விடும் என்கின்ற நம்பிக்கையில் 160 கோடி பட்ஜெட்டில் பேபி ஜான் திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 35 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது. மொத்தமாக சேர்த்து இந்த திரைப்படம் ஒரு 50 கோடி வரை வியாபாரமாகி இருக்கும். இது அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி குறித்து புளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் திரைப்படம் டிசம்பர் 25 வெளியானது. இது தெறி படத்தின் ரீமேக். 160 கோடியில் எடுக்கப்பட்டு 50 கோடி கூட வசூல் ஆகாமல் இப்படம் படுதோல்வியை அடைந்தது.
பட புரமோஷன் சமயத்தில் என்னிடம் பணம் தந்தால் அதை மூன்று மடங்கு லாபமாக திருப்பி தருவேன் என கூறினார் அட்லி. ஆனால் இப்போது போட்டதில் பாதியை எடுக்காமல் போனது பேபி ஜான்' என்று விமர்சித்து இருக்கின்றார்.