ஷங்கரின் 2வது டிசாஸ்டர்!.. ஒரு வார கலெக்ஷனே இவ்வளவுதானா?. புளூ சட்டை ரிப்போர்ட்..!
Game Changer: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். தொடர்ந்து தனது திரைப்படங்களின் மூலமாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து தோல்வியே சந்திக்காத இயக்குனர் வளம் வந்த ஷங்கருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகின்றது. கமலஹாசன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்தார் இயக்குனர் ஷங்கர். இருப்பினும் கேம் சேஞ்சர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படமும் தற்போது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கின்றது.
நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவானது. பாடல்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்திருந்தார்.
இப்படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி இருந்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில் கேம் சேஞ்சர் படம் தொடர்ந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வி படமாக மாறி இருக்கின்றது.
முதல் நாளில் இந்த திரைப்படம் 182 கோடி ரூபாய் வசூல் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் அந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது.
தெலுங்கு சினிமாவில் ராம்சரண் ரசிகர்கள் சற்று ஓட்டி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் மொத்தமாக பிக்கப் ஆகவில்லை என்பதுதான் உண்மை. மேலும் தமிழில் வெளியான மதகஜராஜா திரைப்படம் தான் திரையரங்குகளில் தற்போது சக்க போடு போட்டு வருகின்றது.
பொங்கல் வின்னராக 12 வருடங்களுக்கு பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் மாறி இருக்கின்றது. இந்நிலையில் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் இந்தியன் 2 திரைப்படம் சங்கரின் முதல் டிசாஸ்டர் என்றால் கேம் சேன்ஜ்ர் திரைப்படம் இரண்டாவது டிசாஸ்டர் என்று பதிவிட்டிருக்கின்றார்.
மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில் மொத்தமாகவே 170 கோடி ரூபாய்தான் படம் வசூல் செய்திருக்கின்றது என்று கூறி இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெறும் 170 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது என்றால் எவ்வளவு நஷ்டம் என்று அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள்.