இதே நாங்க பண்ணிருந்தா சலங்கை கட்டி ஆடிருப்பீங்க!.. நயனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ப்ளூ சட்டை!..
நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து 20 வருடங்களை தாண்டி ஹீரோயினியாக நடித்து அசத்தி வருகின்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தற்போது வரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இவருடைய மார்க்கெட் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது தனது கைவசம் நடிகர் கவினுடன் கிஸ் மற்றும் ராக்காயி போன்ற படங்களை வைத்திருக்கிறார்.
நயன்தாராவின் பேட்டி:
நடிகை நயன்தாரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் வலைப்பேச்சு டீம் குறித்து பேசி இருந்தார். மேலும் அவர்களை குரங்கு என்று விமர்சித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் போடும் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் நயன்தாராவை பற்றி பேசுவதாகவும், அதன் மூலம் தான் அவர்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
நயன்தாராவை பற்றி பேசுவதால் தான் எங்களுக்கு வியூஸ் அதிகமாக இருக்கின்றது. எங்கள் சேனலை அதிகமான மக்கள் பார்க்கிறார்கள் என்று அந்த பேட்டியில் அவர் பேசியிருந்தார். இதற்கு வலைப்பேச்சு தரப்பிலிருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும் சினிமா விமர்சகர்களான அந்தணனும் பிஸ்மியும் தனித்தனியாக நயன்தாராவின் பேட்டி குறித்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் வலைப்பேச்சுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'மூன்று நொடி வீடியோ காப்பிரைட் விவகாரத்தில் தனுசை சாடி மூன்று பக்கத்திற்கு கட்டுரை எழுதினார் நயன்தாரா மேடம். அதன் ஆரம்பத்தில் B/o Selvaraghavan, S/o Kasthuriraja என குறிப்பிட்டிருந்தார்.
தனிப்பட்ட விவகாரத்தில் குடும்பத்தினரை இழுப்பது என்ன வகையான நாகரீகம்? இதற்கு பார்வதி உள்ளிட்ட மலையாள நடிகைகள் லைக் வேறு செய்திருந்தனர். ஒருவேளை, இப்படி ஒரு கடிதத்தை தனுஷ் எழுதி, அதில் W/o Vignesh Shivan என்றும், Daughter of என இவரது பெற்றோர் பெயர்களை குறிப்பிட்டிருந்தால், முற்போக்குவாதிகளும், பார்வதி உள்ளிட்ட புரட்சி நடிகைகளும் எப்படி சலங்கை கட்டி ஆடியிருப்பார்கள்.
தற்போது ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா என்கின்ற ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்தபோது தொலைபேசி குழுவினரை மூன்று குரங்குகள் என்று மறைமுகமாக நையாண்டி செய்துள்ளார் நயன்தாரா. ஆங்கிலத்தில் மங்கி எனவும், ஹிந்தியில் பந்தர் எனவும் விளக்கம் வேறு. ஒருவேளை வலைப்பேச்சில் இவரை, இதேபோன்று குரங்குடன் ஒப்பிட்டு பேசி இருந்தால், இந்நேரம் எப்படி கொந்தளித்து இருப்பார்? படத்தை விமர்சனம் செய்வது தவறில்லை.
ஆனால் தரம் தாழக்கூடாது, தனிநபர் தாக்குதல், வன்மம் கூடாது என நீதிபேசும் தனஞ்செயன் போன்ற திரைத்துறை நீதிபோதகர்கள். இப்போ மட்டும் எங்கே போனார்கள்? பெண்களை இழிவாக பேசும்போது, ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள். ஆண்களை பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் ட்ரங்க் பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.