இப்படி கிறுக்கு வேலை பண்ணாதீங்க!.. அஜித் வெளியிட்ட அறிக்கை.. ஒரே போடா போட்ட ப்ளூ சட்டை!..
நடிகர் அஜித்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். சினிமாவிலேயே சற்று வித்தியாசமானவர் நடிகர் அஜித். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தை கலைத்தார். மேலும் ரசிகர்கள் அனைவரையும் பணத்தை வீணடிக்க வேண்டாம். என் படம் ரிலீஸ் ஆகும்போது நேரம் இருந்தால் வந்து பாருங்கள் என்று கூறியிருந்தார்.ஆனால் அஜித் ரசிகர்கள் அஜித்தின் பேச்சை எப்போதுமே கேட்டது கிடையாது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனக்கு எந்த பட்டப் பெயர்களும் வேண்டாம் என்றும், அல்டிமேட் ஸ்டார், தல என்று தன்னை அழைக்க வேண்டாம். அஜித்குமார் அல்லது ஏகே என அழைத்தால் போதும் கோரிக்கை வைத்திருந்தார். இதனால் ரசிகர்கள் அஜித்தை தல என்று அழைக்காமல் இருந்து வந்தார்கள். அதனை தொடர்ந்து புது டிரெண்டாக 'கடவுளே அஜித்தே' என்று கோஷம் இடத் தொடங்கினார்கள்.
கடவுளே அஜித்தே:
பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்து இடங்களிலும் அஜித் ரசிகர்கள் அஜித்தே கடவுளே என்று கத்திக் கொண்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது பல இடங்களில் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இதனை புரிந்து கொண்ட அஜித்குமார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அஜித் அறிக்கை:
அதில் சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் எந்த ஒரு முன்னோட்டம் சேர்த்து அழைப்பதை நான் துளி எனது பெயரில் மட்டும் நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் வேண்டுகிறேன். என் கோரிக்கையை ஏற்று அதற்கு உடனடியாக மதிப்பு கொடுங்கள்' என்று நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார். அஜித்தின் இந்த பதிவு நேற்று இரவு முதல் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இருப்பினும் அவரின் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் பேச்சைக் கேட்காமல் நடந்து கொண்டு வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் அறிக்கை:
இந்நிலையில் அஜித்குமாரின் இந்த அறிக்கை தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தை பதிவு செய்திருக்கின்றார். அதில் 'பள்ளி நிகழ்ச்சிகளில், மேடைகளில் விருந்தினர்கள் பேசும்போது இப்படி கோஷங்களை மாணவர்கள் எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏழு கழுதை வயதான நபர்களும் இப்படி கோஷம் போடுவது கேவலமாக இருக்கின்றது.
அஜித் தற்போது கூறி இருப்பது இதற்கு மட்டுமல்ல. எப்போதும் இப்படி கிறுக்கு வேலைகளை செய்ய வேண்டாம் என்பது தான். நடிப்பு மட்டுமே தனது வேலை. ரசிகர்களின் நேரம், பணம், உழைப்பை சுரண்டி பிழைப்பது அல்ல என்பதை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றது. அதேபோல படம் பார்ப்பதோடு நிறுத்திவிட்டு படிப்பு மற்றும் வேலையை பார்க்கவும்.
இனி இப்படியான வெட்டி கோஷங்களுக்கு அவரது பெயரை பயன்படுத்த வேண்டாம். அதை மீறி யாரேனும் செய்தால் அதை பிடித்து தொங்கி வைரலாக்க வேண்டாம். இதற்கு மேலும் திருந்தாவிட்டால், அவமானம் தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும்தான்' என்று கூறியிருக்கின்றார். இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.
இருப்பினும் நேற்று அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்பதை தனித்தனியாக பிரித்து கோஷமிட்டு வருகிறார்கள்.