கிங்காங் மகள் கல்யாணத்துக்கு ஏன் போகல?!. எல்லாமே போலி!.. நடிகர்களை கிழித்த புளூசட்ட!...

by MURUGAN |   ( Updated:2025-07-11 06:10:43  )
கிங்காங் மகள் கல்யாணத்துக்கு ஏன் போகல?!. எல்லாமே போலி!.. நடிகர்களை கிழித்த புளூசட்ட!...
X

KingKong : தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் காமெடி நடிகராக நடித்து வருபவர் கிங் காங். இவரின் நிஜப்பெயர் சங்கர். அதிசயப்பிறவி படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் நடித்திருந்தார். டேப்பில் ரஜினி போடும் பாடலுக்கு பிரேக் டேன்ஸ் ஆடி அசத்தியிருப்பார். அந்த காட்சிதான் கிங்காங்கை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தது.

அதன்பின் பல படங்களிலும் ஒரு காட்சிகளில் வரும் காமெடி நடிகராக நடித்திருப்பார். குறிப்பாக வடிவேலுவுடன் பல காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக போக்கிரி படத்தில் லாரி டிரைவராக வருவார். அதேபோல், ‘எனக்கு கல்யாணம்னே’ என அவர் சொல்ல அதிர்ச்சயில் வடிவேலு வாயில் ஊற்றியை டீயை கீழே துப்பிவிடுவார். இப்போதும் அது மீம்ஸ் மெட்டீயரலாக இருக்கிறது.


இவரின் மகளுக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பலருக்கும் நேரில் சென்று பத்திரிகை கொடுத்தார். அதில் விஷால், டி.ராஜேந்தர் ஆகியோர் மட்டுமே நேரில் வந்தனர். ஆனால், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றவர்கள் செல்லவில்லை.

இந்நிலையில், இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கிங்காங்' சங்கர் எனும் முன்னுதாரணம்:

உயரம் பற்றிய ஏளன பேச்சுகளை தகர்த்து முன்னேறிய நடிகர் கிங் காங். நகைச்சுவை மட்டுமின்றி வெகுஜனங்களை ‌ஈர்க்கும் நடனத்திலும் கெட்டிக்காரர். சினிமா வாய்ப்பு இல்லாத நேரங்களில் ஊர் ஊராக சென்று தனது கலைக்குழுவை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சிறுக சிறுக சேமித்த‌ பணத்தில் சென்னையின் மையப்பகுதியில் சொந்த வீடு கட்டியவர். ரஜினி, கமல், ஷாருக்கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும நடித்திருக்கிறார். தனது முதல் மகளின் திருமணத்திற்கு வருமாறு பல சினிமா பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.


ஆனால் பலரும் திருமணத்திற்கு செல்லவில்லை காரணம்: இவர் ஒரு சாதாரண காமெடி நடிகர், உயரம் குறைவானவர், பெரிய பணக்காரர் இல்லை. பல கிலோமீட்டர் பயணித்து நேரில் பத்திரிக்கை வைத்தவரை மதித்து திருமணத்திற்கு செல்ல ஒரு சினிமா நடிகருக்கு (சிவ்ராஜ்குமார்) கூடவா மனம் வரவில்லை?

சக திரைக்கலைஞரை இவர்கள் மதிக்கும் லட்சணம் இதுதான். ஆனால் ஆடியோ லான்ச் மேடைகளில் மனிதநேயம், சமத்துவம் பற்றி இந்த யோக்கியர்கள் மணிக்கணக்கில் பேசுவார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

Next Story