Connect with us
sk

Cinema News

விஜய் கொடுத்தது தீபாவளி துப்பாக்கி!.. திடீர் தளபதி அலப்பறைகள்.. SK-வை பொளக்கும் பிரபலம்!..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின் வளர்ச்சியை பார்த்து இவருக்கு முன் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களே பொறாமைப்பட்டார்கள். மிகவும் குறுகிய காலத்தில் அனைவரையும் ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் எஸ்.கே.

ரஜினி, விஜய் ஸ்டைலில் படங்களில் நடித்து அவர்களின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால் ‘அப்படி எல்லாம் எனக்கு ஆசை இல்லை’ என சொல்வார். இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் சிவகார்த்திகேயனை பற்றி ‘திடீர் தளபதி கடந்து வந்த பாதை’ என்கிற தலைப்பில் அவரை நக்கலடித்து சில பாயிண்ட்ஸ்களை பதிவிட்டிருக்கிறார். அது என்னன்னு பார்ப்போம் வாங்க…

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட சிவகார்த்திகேயன் ‘அது இது எது’ என்கிற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ஒருகட்டத்தில் காமெடி ஹீரோவாக உயர்ந்து வெற்றி பெற்றார். சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்த முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. இடையில் தயாரிப்பாளராகவும் மாறினார். அதில் கனா படம் மட்டுமே தேறியது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கொட்டுக்காளி போன்ற படங்கள் தோல்வி.

டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களை கொடுத்து விட்ட மார்க்கெட்டை பிடித்தார். அதேநேரம் பிரின்ஸ், மாவீரன், அயலான் போன்ற படங்கள் மண்ணைக் கவ்வியது. கோட் படத்தில் விஜயிடம் துப்பாக்கியை வாங்கி திடீர் தளபதியாக மாறினார். சாய்பல்லவியின் அசத்தலான நடிப்பில் அமரன் பெரிய ஹிட் அடித்தது. பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது போல அது சிவகார்த்திகேயனுக்கு உதவியது.

இவரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. இவர்தான் அடுத்த விஜய் என தியேட்டர் அதிபர்களும், சினிமா வல்லுனர்களும் கொம்பு சீவி விட அதை உண்மை என நம்பினார். அமரன் வெற்றி பெற்றதும் சமூக வலைத்தளங்களில் குறுக்க, மறுக்க ஓட ஆரம்பித்தார். ஏகப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இறக்கினார். திடீரென நல்லகண்ணு அய்யாவை சந்திப்பது, ஐபிஎல் போட்டியை பார்ப்பது என ரகம் ரகமான போட்டோ, வீடியோக்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

சின்ன பட்ஜெட்டில் ஹிட் கொடுத்த படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவைத்து கிழக்கு கடற்கரை பண்ணையார் போல பாராட்டினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் தர்ம அடி விழவே அந்த சேட்டையை நிறுத்திவிட்டார். அமரன் படத்திற்கு பின் மதராஸியில் மீண்டும் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார். ஆனால் இந்த படத்தில் சாய் பல்லவியோ, சூரியோ இல்லை. எனவே படம் பப்படம் ஆனது.

இந்த தோல்வியால் விஜய் தனக்கு தந்தது அசல் துப்பாக்கியா இல்லை கலாய்ப்பதற்கு கொடுத்த தீபாவளி துப்பாக்கியா என யோசிக்க துவங்கியிருக்கிறார். வருகிற பொங்கலுக்கு பராசக்தி படம் மூலம் விஜயின் ஜனநாயகனுடன் மோதுகிறார். பொங்கலுக்கு திடீர் தளபதியின் துப்பாக்கி வெடிக்குமா?’ வீ ஆர் வெயிட்டிங்’ என நக்கலடிடுத்திருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top