அஜித்துக்கு வாழ்த்து!.. விஜய் மீதுள்ள காண்டுதான் காரணமா?!.. தலைவரை சீண்டும் புளூசட்டமாறன்!..

by Murugan |
rajini
X

Rajinikanth: பிரபல யுடியூபர் புளுசட்டமாறன் தொடர்ந்து நடிகர்களை விமர்சித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என ஒருவரையும் அவர் விடுவதில்லை. இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவரை எப்படி திட்டினாலும் அவர் பயப்படுவதில்லை. தொடர்ந்து பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். குறிப்பாக ரஜினியை தொடர்ந்து அவர் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்துக்கு ரஜினி வாழ்த்து சொன்னதை வைத்து மீண்டும் அவரை சீண்டியிருக்கிறார். டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

அஜித்துக்கு வாழ்த்து: கார் ரேஸில் அஜித் வென்றதற்கு தலீவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார். அரசியலுக்கு வர பயந்து புறமுதுகிட்டு ஓடியவருக்கு தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க மனமில்லை. நான் முன்பே சொன்னதுபோல தமிழக அரசியலை தீர்மானிக்கும் கிங் மேக்கராக அதாவது தனது குருநாயர் சோ-வைப் போல மாற வேண்டுமென முயற்சி செய்கிறார்.


ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் ஒரு சதவீதம் கூட இவருக்கில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். அது இவருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யமே இல்லை. தலீவருக்கு இரண்டே ஆசைகள்தான். தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேணடும். திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீது இவருக்கு இருக்கும் காண்டு.

விஜய் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என சொன்னதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார். ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ என்கிற பதட்டம் தொற்றிக்கொண்டது. அப்படி நடந்து விஜய் முதல்வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதை தலீவரால் ஜீரணிக்கவே முடியாது.


இந்த புத்தாண்டில் ‘நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான்’ என டிவிட் போட்டார். எப்போதுமே வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர் இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார். அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம்.

இப்போது அஜித் ரேஸில் வென்றதற்கு திடீர் அதிசயமாக வாழ்த்து கூறியுள்ளார். அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டியிருக்கிறார். தலீவரே எதிர்பார்க்காத டிவிஸ்ட் 2026 தேர்தல் முடிந்த பிறகு நடக்க வாய்ப்புணடு. ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம்.

அப்படி ஒரு நிலைமை வந்தால் மீண்டும் விஜய்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார். தலீவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் வசூல் கோட் வசூலில் 30 சதவீதம் கூட இல்லை. எனவே, மின்சார கண்ணாவால் தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி. விஜய் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார்’ என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் புளூசட்ட மாறனை கெட்டவார்த்திகளில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

Next Story