Bison: திடீர் தளபதிய காணோம்!.. பைசன் மேட்டரில் எஸ்.கே.வை வம்பிழுத்த புளூசட்ட மாறன்...

தீபாவளி ரிலீஸாக கடந்த 17ஆம் தேதி வெளியான திரைப்படம் பைசன். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழில் இரண்டு படங்களில் துருவ் விக்ரம் நடித்திருந்தாலும் பைசன் திரைப்படம் அவரை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது.
முதல் இரண்டு படங்களில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்கேற்ப அவருக்கான கதையாகவும் அந்த இரண்டு படங்கள் அமையவில்லை. ஆனால் பைசன் திரைப்படம் துருவ் விக்ரமின் பசிக்கு தீனி போட்ட படமாக மாறியது. நடிகர் விக்ரம் எப்பேற்பட்ட மாபெரும் நடிகர் என அனைவருக்கும் தெரியும். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகன் என்று சொல்வார்கள்.
அப்படி பைசன் திரைப்படத்தின் மூலம் தான் யார் என்பதை நிருபித்திருக்கிறார் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயர் இருக்கிறது. அவர் படம் என்றாலே சாதிய போர்வையில் அமுக்கப்பட்ட படமாகத்தான் இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அப்படித்தான் பைசன் திரைப்படத்தையும் விமர்சித்தார்கள். இன்னும் சிலர் மாரிசெல்வராஜ் புதுசா என்ன சொல்லி விடப்போகிறார் என்று கருதியே பைசன் படத்தை பார்க்காமல் கூட இருந்திருக்கிறார்கள்.
ஆனால் போக போக பைசன் திரைப்படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனம் அதிகமாக படத்தை பார்க்க ஆர்வமாக மக்கள் செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கிடையில் எந்தவொரு படமாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டு பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்த வகையில் பைசன் திரைப்படத்தையும் பார்த்த ரஜினி மாரிசெல்வராஜை அழைத்து மனதார பாராட்டியிருக்கிறார்.
ரஜினியும் மாரிசெல்வராஜும் சந்தித்து கொண்ட புகைப்படத்தை டேக் செய்து ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை வம்பிழுத்திருக்கிறார். ஏனெனில் ரஜினியின் இந்த ஃபார்முலாவை சிவகார்த்திகேயனும் ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். வட்ட மேஜை மாநாடு மாதிரி படக்குழுவினருடன் ஒரு மீட்டிங்கை அமைத்து படத்தை பாராட்டி வந்தார் சிவகார்த்திகேயன்.
அதனால் ரஜினி பைசனை வாழ்த்திட்டாரு. ஐயா திடீர் தளபதி ஏன் அமைதியா இருக்கீங்க என்பது போல பைசன் திரைப்படத்தை இன்னும் சிவகார்த்திகேயன் ஏன் பாராட்டவில்லை என்பதை கிண்டலாக பதிவிட்டிருக்கிறார் ப்ளூசட்டை மாறன்.