மன்னிப்பு கேட்ட கார்த்தியை பங்கம் பண்ணிய ப்ளூசட்டை மாறன்! இவர்தான் தன்மானத்தமிழன்

திருப்பதி லட்டு விவகாரம் இப்போது பெரிய அளவில் சூடுபிடித்திருக்கிறது. பெரிய தவறு நடந்து விட்டதாக பல பூஜைகள், யாகங்கள், ஹோமங்கள் எல்லாம் நடந்து வருகின்றன. இதற்கிடையில் லட்டை பற்றி மெய்யழகன் ப்ரோமோஷனில் கிண்டலாக பேசியதாக கார்த்தியை பற்றி பவன் கல்யாண் கடுமையாக பேசியிருந்தார். அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. ஆனால் உடனே கார்த்தியும் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் உண்மையில் பவன் கல்யாண் கோபத்திற்கு ஆளான நடிகர் பிரகாஷ்ராஜ். பவன் கல்யாணின் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்த்ததும் பிரகாஷ்ராஜ் ஒரு வீடியோவில் பேசி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பவன் கல்யாண் தவறாக புரிந்து கொண்டார். அவரை நேரில் வந்து சந்தித்து விளக்கமாக பதில் அளிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

லட்டு பற்றி பிரகாஷ்ராஜ்தான் ஏதோ சில விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் கார்த்தியைத்தான் டார்கெட் செய்து பவன் கல்யாண் பேசியதாக சொல்லப்பட்டது. உடனே நம்மைத்தான் பவன் கல்யாண் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என நினைத்து கார்த்தியும் அதிரிபுதிரியாக மன்னிப்பும் கேட்டார். இதைக் குறிப்பிட்டு ப்ளூசட்டை மாறன் அவசரப்பட்டு மன்னிப்பு கேட்டாரு, நாமளும் மன்னிச்சிட்டதா சொல்லி கெத்தை மெயிண்டைன் பண்ணுவோம் என்ற வகையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

மேலும் ஒரு வடிவேலு நடித்த காமெடி காட்சியில் தன்னைத்தான் துரத்தி அடிக்க வர்றாங்களோனு வடிவேலு ஓடுவார். ஆனால் அவர்கள் வேறு யாரையோ அடிக்க துரத்துவார்கள். அதை போலத்தான் ‘என்ன .. நம்மளை நோக்கி ஆவேசமா வர்றாங்க. பேசாம மன்னிப்பு கேட்ருவோம் என கார்த்தி நினைக்க ‘அடப்பாவிகளா.. நீங்க துரத்துனது பிரகாஷ்ராஜையா? அதை ஆரம்பத்துலயே தெளிவா சொல்லக்கூடாதா’ மாதிரி கடைசியில் ஆகிப்போச்சு என ப்ளூசட்டை மாறன் கூறியிருக்கிறார்,

இதுவே தன்மானத்தமிழன் விஜயகாந்தா இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார். பாகுபாலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திர நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி.

மேலும் தன்னுடைய படம் எந்தவித தடையூறும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக தமிழ் உணர்வையும் விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்ற வகையில் ப்ளூசட்டை மாறன் கார்த்தியை பற்றி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it