படம் பிளாப்னா எந்த ஹீரோ ஒத்துக்கிறாங்க? இப்ப சசிக்குமார்... அப்போ அஜித்! பொளக்கும் புளூசட்டைமாறன்

by SANKARAN |
sasikumar, ajithkumar
X

பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான புளூசட்டை மாறன் தன் எக்ஸ் தளத்தில் ப்ளாப் படங்கள் குறித்தும் ஹீரோக்களின் நிலைப்பாடு குறித்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதுல சசிக்குமாரையும், அஜித்தையும் ஒப்பிட்டுள்ளார்.

தன் படம் ஃபிளாப் என்னும் உண்மையை எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்வதில்லை. ஆளுயர மாலை, கேக் கட்டிங், பல கோடி வசூல் போஸ்டர் என காமெடி செய்வார்கள். சமீபத்தில் தனது ஃப்ளாப் படங்கள் குறித்து சசிக்குமார் ஓபனாகப் பேசினார். முன்பு இதே போல அஜித் பேசியுள்ளார் என அதற்கான வீடியோவையும் புளூசட்ட மாறன் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் பேசும்போது பிளாப் படங்கள் குறித்து பல விஷயங்களைப் பேசினார்.

டைரக்டர் தான் கப்பல் கேப்டன் மாதிரி. அவங்க தான் ஒரு கேரக்டரை உருவாக்குறாங்க. அதை செதுக்குறாங்க. ஆசை, காதல் கோட்டை படங்களின் வெற்றிக்கு அவங்க தான் காரணம். 1996ல் வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, மைனர் மாப்பிள்ளை எல்லாம் கதை கேட்டுத்தான் ஒத்துக்கிட்டேன்.


நான் வந்து ஒரு நடிகன். கதை கேட்டு ஒரு டைரக்டருக்கு கரெக்ஷன் சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இருந்தா நான் நடிக்கவே வந்துருக்க மாட்டேன். டைரக்டரா ஆகிருப்பேன். படம் சக்சஸ் ஆனா மட்டும் அதுக்குக் காரணம் டைரக்டர்னு சொல்றீங்க. ப்ளாப் ஆனா மட்டும் என்னோட தப்பு கிடையாது. ரெண்டரை கோடி செலவு பண்ற தயாரிப்பாளர் கதையைக் கேட்டு தானே ஓகே பண்ணிருப்பாங்க.

1997ல நேசம், ராசி, உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, பல்லவன்னு 5 படங்களும் பெரிய அளவில் கமர்ஷியலா ஹிட்டாகல. கதை கேட்காததால அது என் தப்புன்னா கதை கேட்டு அதை ஓகே பண்ணின தயாரிப்பாளருக்கும் அதே ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு. அதனால் அது என் தப்பு இல்லன்னு அந்த வீடியோவில் அஜித் தெரிவித்துள்ளார்.

Next Story