துணிவு விஜய் படமா? மேடையில் உளறிய போஸ் வெங்கட்... வாய் இருக்குனு பேசாதீங்கப்பா...
Bose Venkat: நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் சமீபகாலமாக தேவையே இல்லாமல் பேசி வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார். அதற்கு சமீபத்திய விவகாரம் உதாரணமாக மாறி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய் இந்த ஆண்டு தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியின் அறிவிப்புக்கு பின்னர் சமீபத்தில் இதன் முதல் மாநில மாநாடு நடந்தது. அதன் பின்னர் விஜயை பல கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விமர்சிப்பதை வழக்கமாக செய்து கொண்டு இருக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்ச்சியாக விஜயின் நிகழ்வுகளை குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதுபோல நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் முதல் மாநில மாநாடு முடிந்த சமயத்தில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இன்னொரு நிகழ்வில் போஸ் வெங்கட் பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அவர் பேசும் போது, விஜயின் பட ரிலீஸ் சமயத்தில் ஒரு பையன் பஸ்ஸில் இருந்து விழுந்து இறந்துவிட்டான். அதுவே புஷ்பா2 பட ரிலீஸ் சமயத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் 25 லட்சம் நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார். ஒரு தலைவன் கொடுக்கணும் சார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் அந்த இளைஞன் இறந்தது துணிவு படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான். அஜித் படத்தை விஜய் படமாக திரித்து பேசுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.