2024ல் சூப்பர் பிரேக் கிடைத்த பிரபலங்கள்… லிஸ்ட்டில் இவங்க இல்லாம எப்படி?
Kollywood: தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு தங்களுடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய உச்சத்தை பெற்ற டாப் 5 சினிமா பிரபலங்கள் குறித்த சுவாரசிய அப்டேட்.
ஸ்வாதிகா - லப்பர் பந்து
தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இப்படத்தில் கெத்து கேரக்டரில் நடித்த தினேஷ் கார்த்திக் மனைவியாக நடித்திருந்தவர் ஸ்வாதிகா.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இக்கதையில் இரண்டு ஆண்களின் ஈகோ சம்பந்தப்பட்ட விஷயமே மிகப்பெரியதாக காட்டப்பட்டிருந்தது. அதில் தனக்கு கிடைத்த சின்ன ரோலை நேர்த்தியாக செய்து ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளினார். இப்படத்தில் இவரின் இன்ட்ரோ காட்சி சமீபகாலத்தில் ஹீரோயின்களுக்கு கிடைக்காத மாஸ் காட்சியாக அமைந்தது.
ஸ்ரீ கௌரி பிரியா - லவ்வர்
மாடல் லவ் சென்னை அந்தாலஜி மூலம் கோலிவுட் எண்ட்ரி கொடுத்தவர். இதைத்தொடர்ந்து லவ்வர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். டாக்ஸிக் காதலனை சமாளித்து தன்னுடைய வாழ்க்கையை ரசித்தது ரசிகர்களிடம் ஹிட் கிடைத்தது.
நஜூ நவோதியா - புளூ ஸ்டார்
தமிழ் சினிமாவின் இன்னொரு சின்ன பட்ஜெட் சூப்பர் ஹிட் திரைப்படம். இத்திரைப்படத்தில் மிக குறுகிய காட்சிகள் வந்தாலும் தன்னுடைய அக்மார்க் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நஜூ நவோதியா.
பிரீத்தி முகுந்தன் - ஸ்டார்
கவின் நடிப்பில் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். ஆனால் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இருந்தும் இப்படத்தில் அவரின் லவ்வராக நடித்த பிரீத்தி முகுந்தன் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
மாறன் - ஜே பேபி
விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் வைரலாக பரவியவர் மாறன். நடிகர் சந்தானத்தின் எல்லா திரைப்படங்களிலும் சின்ன வேடத்தில் நடித்து விடுவார். ஆனால் சமீபத்தில் சந்தானம் திரைப்படத்தில் ’என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சுகிட்டு இருக்க’ டயலாக்கால் ரசிகர்களிடம் ஹிட்டடித்தார்.
காமெடியாகவே பார்த்த மாறனின் அக்மார்க் எமோஷனல் நடிப்பை ஜே பேபி திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. அதிலும் ஊர்வசியின் மகனாக எங்கும் பிசிரு இல்லாமல் அவர் கொடுத்த நடிப்பை பார்த்து கண்கலங்கியவர்கள் பலர்.