விஜய்க்கு வில்லன் பாபி தியோல் கிடையாதாம்?.. இவரு தானாம்.. அந்த பிரபலம் என்ன இப்படி சொல்றாரு!..
நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் அப்டேட்கள் நேற்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளன. படத்தில் விஜய்க்கு வில்லனாக அனிமல் மற்றும் கங்குவா படங்களில் மிரட்டி வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு வில்லனாக படத்தில் வேண்டுமானால் பாபி தியோல் புக் ஆகலாம். ஆனால், நிஜத்தில் அவருக்கு வில்லனே புஸ்ஸி ஆனந்த் தான் எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி வழங்கினாலே சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆட்கள் வந்து விடுவார்கள். எந்தளவுக்கு கூட்டத்துக்கு அனுமதி என்பது தான் பிரச்சனையே. ஆனால், புஸ்ஸி ஆனந்த் தினமும் ராத்திரியான விளக்கு வச்சிக்கிட்டு போர்வை விக்கிறவன் மாதிரியே இது ஜப்பான் பட்டு என கம்பு சுத்திக் கொண்டிருக்கிறார்.
வேலைக்கு போகக் கூடாது என்றும் வேலையை விட்டு விட்டு தளபதி விஜய்யின் மாநாட்டுக்கு வர வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் தவெகவுக்கு இருக்கும் கொஞ்சம் நல்ல பெயரை கெடுக்கும் முதல் வில்லனே புஸ்ஸி ஆனந்த் தான் என அந்தணன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
தனது ரசிகர்களின் வேலையை கெடுத்து விட்டு தலைவன் அரசியல் வேலைக்கு வருவாரா? இதெல்லாம் கேட்கவே நல்லாவே இல்லையே. விஜய் முதலில் புஸ்ஸி ஆனந்த் பேசுவதை எல்லாம் கொஞ்சம் பார்த்து அவரை கட்டுப்படுத்தினால் தான் அவருக்கு அரசியலில் எதிர்காலம் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாத இறுதியில் அரசியல் மாநாட்டை வைத்திருக்கும் நடிகர் விஜய் அதற்கு முன்னதாக வரும் அக்டோபர் 5ம் தேதி தளபதி 69 படத்துக்கு பூஜை போட்டு அந்த படத்தில் நடிக்க ஆரம்பிக்கப் போகிறார் என்றும் அதற்கான வேலைகளில் தான் விஜய் தீவிரமாக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
அரசியல் மாநாட்டுக்கு ஆள் திரட்டும் பணிகளை எல்லாம் புஸ்ஸி ஆனந்த் இப்படித்தான் செய்து வருகிறார் என சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்கள் எல்லாம் ட்ரோல் செய்து வருவது தனிக்கதை.