2024-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்.. ரசிகர்கள் ஹார்ட்ட இப்படி உடைச்சிடீங்களே!..
வரலட்சுமி தொடங்கி நடிகை கீர்த்தி சுரேஷ் வரை பலரும் 2024 ஆம் ஆண்டு தங்களது காதலர்களை கரம் பிடித்திருக்கிறார்கள். சினிமாவில் கனவு கன்னியாக வந்த இவர்கள் திடீரென்று திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் இதயத்தை நொறுக்கி விட்டனர். அப்படி திருமணம் செய்து கொண்டவர்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நடிகை வரலட்சுமி: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி தனது காதலரான நிக்கோலாய் நிக்கோலய் சச்தேவை கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
ஐஸ்வர்யா அர்ஜுன்: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது.
மேகா ஆகாஷ்: நடிகை மேகா ஆகாஷ் நடிகர் சாய் விஷ்ணுவும் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகர் சாய் விஷ்ணு அரசியல் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ஆவார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரம்யா பாண்டியன்: தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரம்யா பாண்டியன் தனது காதலரான யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவரை கடந்த நவம்பர் 8ம் தேதி ரிஷிகேஷில்ல கங்கை நதி கரையோரம் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் எளிமையாக நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ்: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நேற்று கோவாவில் தனது 15 ஆண்டு காதலரான தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா: நடிகர் நாக சைதன்யா கடந்த இரண்டு வருடங்களாக நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
நடிகர் சித்தார்த்: நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதரியை காதலித்து வந்த நிலையில் இருவீட்டர் சம்பந்தத்துடன் செப்டம்பர் 16ஆம் தேதி கோவிலில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்
நடிகர் பிரேம்ஜி: பல வருடங்களாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி வந்தார். இந்நிலையில் தன் காதலியான இந்துவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.