கதையெல்லாம் வேணாம்... 75 லட்சம் தந்தா நடிக்கிறேன்... பார்த்திபன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பிரபலம்

நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் பீச்சாங்கை படத்தில் நடித்துள்ளார். இவர் தனது சினிமா அனுபவங்களை ஆகாயம் சினிமாஸ் என்ற யூடியூப் சேனலில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
அசோக் கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவருக்கு எதிரியாவே இருந்தாலும் இந்தப் படத்துக்கு அவர் பொருத்தமா இருப்பாருன்னா அவரைக் கூப்பிடுவாரு. அசோக் எனக்கு கார்த்திக் தான் வேணும்னு சொன்னாரு. அப்புறம் ரெண்டு மூணு மாசம் டிலே ஆகுது. படத்தை நாமே பண்ணுவோம்னு சொல்றேன். எப்படி கார்த்திக் பண்ண முடியும்னு கேட்டாரு.
இவங்க தான் யோசிக்கிறாங்களே. என்னை வச்சி எப்படி ஹீரோவா பண்ண முடியும்னு. நாமே பண்ணுவோம்னு சொன்னேன். நான் என் வீட்டை அடமானம் வச்சிப் பண்றேன்னு சொன்னேன். பணம் ரெடி பண்றேன்னு சொன்னேன். நாங்க ஒண்ணே கால் கோடிக்குப் போட்ட பட்ஜெட்டை 60 லட்சத்துக்குக் குறைக்கிறோம். எனக்கு எந்த ஆர்டிஸ்டும் வேணாம். குறிப்பா சொல்லணும்னா இதுல நல்லதம்பின்னு ஒரு கேரக்டர் இருக்கு. அதுக்கு பார்த்திபனை நடிக்க வைக்கலாம்னு கேட்குறோம்.
அவருக்கிட்ட இந்த மாதிரி பீச்சாங்கை படம் பண்றோம். அதுல நல்ல தம்பின்னு ஒரு கேரக்டர் இருக்கு. நீங்க பண்ணித் தரணும்னு கேட்கிறேன். டைம் கொடுத்தீங்கன்னா கதை சொல்றேன்னு சொன்னேன். 'கதை எல்லாம் வேணாம்பா. 75 லட்சம் கொடுத்தீன்னா நடிச்சிக் கொடுக்குறேன்'னு சொன்னார். 'சார் 5 நாள் தான் சூட்டிங்'னு சொன்னேன்.
'நீ 5 நாள் எடுப்பியோ 50 நாள் எடுப்பியோ எனக்கு சம்பளம் 75 லட்சம்'னாரு. 'ஓகேன்னா சொல்லு டேட் கொடுக்குறேன்'னு சொன்னார். அவரு கதை கேட்டாருன்னா நமக்கு சப்போர்ட் பண்ணுவாருன்னு நினைச்சேன். ஆனா அதைக் கேட்கவே இல்லை. அப்போ தான் நான் முடிவு பண்ணினேன். எனக்கு எந்த ஆர்டிஸ்டும் வேணாம்னு என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார் நடிகர் ஆர்எஸ்.கார்த்திக்.
2017ல் அசோக் இயக்கத்தில் பீச்சாங்கை படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஞ்சலி ராவ், எம்எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வெங்கடேஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீச்சாங்கை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.கார்த்திக், பிஜி.முத்தையா. பார்த்திபன் நடிக்க மறுத்த நல்லத்தம்பி கேரக்டரில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.