ஜெயம் ரவி செஞ்ச அந்த தப்பு... கதறும் ஆர்த்தி, குழந்தைகள் மேல அக்கறையே இல்லையா?

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து ஒரு பக்கம் போய்க்கொண்டு உள்ளது. இன்னொரு பக்கம் கெனிஷா தான் தன் அழகான வாழ்க்கைத் துணை என்று சொல்லிவிட்டார். இதுதான் இப்போது சமூக ஊடகங்களைப் பற்ற வைத்துள்ளது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சொல்வது இதுதான்.
ஜெயம் ரவியோட வாழ்க்கையில் நடந்து வரும் விஷயம் ஒரு தனிப்பட்ட விஷயம். அதை ஊடகங்கள் பெரிதாகப் பேசுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் சினிமாவைப் பற்றித் தான் பேச வேண்டுமே தவிர சினிமாக்காரர்களைப் பற்றிப் பேசக்கூடாது. அதாவது அவர்களது சொந்த வாழ்க்கை, தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடாது.
ஜெயம் ரவி தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக சொல்கிறார் என்றால் அவர் எந்தளவு பாதிக்கப்பட்டு இருப்பார்? அந்த வகையில் தன்னைப்பற்றிய விஷயங்களை மீடியாக்களில் வெளியிடுவதும் தவறு. ரசிகர்கள் அதை பார்த்து பார்த்து அதுமாதிரியான செய்திகள் அதிகம் வர ஆரம்பிக்கின்றன. அவர்களும் தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.
திரை உலகைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லாத் துறைகளிலும் சமீபகாலமாக விவாகரத்து எல்லாம் சாதாரண விஷயம்தான். இது ஊடக வெளிச்சம் படுவதால் வெளி உலகிற்கு எளிதில் தெரிந்து விடுகிறது. திரை உலகைச் சார்ந்தவர்களுக்கு ஒரு இடத்தைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய போராட்டம். அதற்கு சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
அது கிடைத்ததும் அந்த அந்தஸ்தைத் தக்க வைப்பது என்பது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. அதனால் அவர்களுக்கு குழந்தை, குடும்பத்தைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இது பின்னாளில் குடும்பத்தில் பூதாகரமாக வெடிக்கிறது. அதுதான் ஜெயம் ரவி, ஆர்த்தி விஷயத்திலும் நடந்துள்ளது. சமூக ஊடகங்கள் இதைப் பெரிதாகப் பேசுகிறது.
அதனால் அதைப் பார்த்து பல ஊடகங்களும் நாமும் போடுவோமே என போட்டு விடுகிறார்கள். இது ஜெயம் ரவி செஞ்ச தப்பு. இதனால் ஆர்த்தியும் கதற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் சண்டை போட்டுக் கொள்வது குழந்தைகளை ரொம்பப் பாதிக்கும். இருவரும் படிச்சிருக்காங்க. இருவரும் அவங்கவங்க துறையில் பெரிய ஆளா இருக்காங்க. அதனால இது மாதிரி ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டு சொல்வது சரியானது அல்ல.
ஆர்த்தியைப் பொருத்தவரை குழந்தைகள் தான் முக்கியம்னு சொல்றாங்க. ஆனா அவங்க செயல்பாடு அதற்கு மாறாகத் தான் தெரிகிறது. இப்படி மாறி மாறி குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் வைக்கும்போது இவர்கள் இருவருக்குமே குழந்தைகள் மீது அக்கறையில்லையோ என்று தான் தோன்றுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
பாடகி கெனிஷாவுடன் பழகுவது வெளியில் தெரிந்ததும் ஜெயம் ரவி அவர் ஒரு ஹீலிங் தெரபிஸ்ட். அவர்தான் எனக்கு ட்ரீட் மெண்ட் கொடுக்கிறார் என்றார். அதே நேரம் கெனிஷாவுடன் ஜசரி கணேஷின் இல்லத்திருமணவிழாவுக்கு வரும்போது பரவலாக இருவரும் திருமணம் செய்யப் போகிறார்களா என பேசப்பட்டது. இப்போது அதுவே உண்மை என்பது போல ஜெயம் ரவியும் தெரிவித்துள்ளார்.